இந்தியா

நில வணிக உரிமையாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி நில வணிக உரிமையாளர் சங்கத் தலைவர் பழனிசாமி, செயலாளர் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பொருளாளர் அன்பரசு, செயற்குழு உறுப்பினர் தமிழ்மலர் ஆகியோர் முதல்வர் ரங்கசாமி யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா கால சிரமங்களை கருதி, அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ், புதிதாக விண்ணப்பிக்கவும், அதற்கான

புதுச்சேரி : புதுச்சேரி நில வணிக உரிமையாளர் சங்கத் தலைவர் பழனிசாமி, செயலாளர் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பொருளாளர் அன்பரசு, செயற்குழு உறுப்பினர் தமிழ்மலர் ஆகியோர் முதல்வர் ரங்கசாமி யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா கால சிரமங்களை கருதி, அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ், புதிதாக விண்ணப்பிக்கவும், அதற்கான காலக்கெடுவை 1 வருடம் நீட்டிக்கவும் ஆவன செய்ய வேண்டும்.அங்கீகாரம் இல்லாத மனை பிரிவில் விற்பனை ஆகாமல் 8 மனைகளுக்கு மிகாமல் இருந்தால், அங்கீகாரம் அளிப்பது போல், 12 மனைகள் வரை நீட்டித்து அங்கீகாரம் வழங்க வேண்டும்.கடந்த 2017 ஜனவரி 31க்கு முன்பு பதியப்பட்ட மனைகளுக்கு பி.பி.ஏ. வழங்கும் அங்கீகாரத்திற்கான கால தாமதத்தை தவிர்க்க, அதற்கான கட்டணத்தை 'டி.டி.' யாக பதிவு அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

விற்பனை செய்யப்பட்ட மனைகள், மனை பிரிவுகளுக்கு ஆர்.இ.ஆர்.ஏ., அனுமதி தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 2017க்கு பின்பு பதிவு செய்த மனைகளை குறைந்தபட்ச அபராத தொகையுடன் அங்கீகரிக்க வேண்டும். அனைத்து பிராந்தியத்திலும் ஒரே மாதிரியான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X