லாரி மீது கார் மோதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது கார் மோதல்

Added : செப் 12, 2021
Share
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு படுகாயம் அடைந்தனர்.சென்னை, பேசின் பிரிட்ஜ் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் புருஷோத்தமன், 37; இவர் நேற்று, தன்னுடன் பணிபுரியும் ஏட்டு சதீஷ்குமார், 28; என்பவருடன், ஹூண்டாய் அசன்ட் காரில் தனது சொந்த ஊரான சேலம், அஸ்தம்பட்டிக்குச் சென்றார். காரை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு படுகாயம் அடைந்தனர்.

சென்னை, பேசின் பிரிட்ஜ் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் புருஷோத்தமன், 37; இவர் நேற்று, தன்னுடன் பணிபுரியும் ஏட்டு சதீஷ்குமார், 28; என்பவருடன், ஹூண்டாய் அசன்ட் காரில் தனது சொந்த ஊரான சேலம், அஸ்தம்பட்டிக்குச் சென்றார். காரை சதீஷ்குமார் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலாபுரம் அருகே அதிகாலை 2:30 மணியளவில் வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.இதில், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், ஏட்டு சதீஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X