பிரதமர் மோடிக்கு கவர்னர் நன்றி | Dinamalar

இந்தியா

பிரதமர் மோடிக்கு கவர்னர் நன்றி

Added : செப் 12, 2021
Share
புதுச்சேரி : பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமருக்கு, கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:காசி வீதிகளில் சுதந்திர கனலோடு நடமாடியவர் சுப்ரமணிய பாரதியார். அவரது நுாற்றாண்டு நினைவு நாளில் போற்றும் வகையில், காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர்

புதுச்சேரி : பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமருக்கு, கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:காசி வீதிகளில் சுதந்திர கனலோடு நடமாடியவர் சுப்ரமணிய பாரதியார். அவரது நுாற்றாண்டு நினைவு நாளில் போற்றும் வகையில், காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார் இதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X