மீனவர்களுக்கு இழப்பீடு உள்துறை அமைச்சர் உறுதி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீனவர்களுக்கு இழப்பீடு உள்துறை அமைச்சர் உறுதி

Added : செப் 12, 2021
Share
காரைக்கால் : 'கடற்கொள்ளையரால் தாக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.காரைக்காலில் அவர் நேற்று அளித்த பேட்டி:மாநில மீனவர்கள் மீது புதுச்சேரி அரசுக்கு அக்கறை உள்ளது. மீனவர்கள் மீது அக்கறை இல்லாததால் தான் முன்னாள் முதல்வர் நாராயணசாமியை மக்கள்

காரைக்கால் : 'கடற்கொள்ளையரால் தாக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

காரைக்காலில் அவர் நேற்று அளித்த பேட்டி:மாநில மீனவர்கள் மீது புதுச்சேரி அரசுக்கு அக்கறை உள்ளது. மீனவர்கள் மீது அக்கறை இல்லாததால் தான் முன்னாள் முதல்வர் நாராயணசாமியை மக்கள் புறக்கணித்து உள்ளனர்.கடற்கொள்ளையர்களால் காரைக்கால் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விரைவில் முதல்வருடன் பேசி உரிய இழப்பீடு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X