தமிழ் பயிற்றுமொழி மாநாடு கவர்னர் தமிழிசை துவக்கி வைப்பு| Dinamalar

இந்தியா

தமிழ் பயிற்றுமொழி மாநாடு கவர்னர் தமிழிசை துவக்கி வைப்பு

Added : செப் 12, 2021
Share
புதுச்சேரி : தமிழ் பயிற்று மொழி மாநாடு, அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது.கவர்னர் தமிழிசை, மாநாட்டை துவக்கி வைத்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் முன்னாள்
 தமிழ் பயிற்றுமொழி மாநாடு  கவர்னர் தமிழிசை துவக்கி வைப்பு

புதுச்சேரி : தமிழ் பயிற்று மொழி மாநாடு, அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது.கவர்னர் தமிழிசை, மாநாட்டை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை அறிவியலாளர் பரசுராமன், வேளாண் அறிவியல் தமிழ் இயக்க நிறுவனர் முத்தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில், தமிழ் ஆய்வியல் அறிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.டில்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X