அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை திரும்பினார் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை--தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சை முடித்து, நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, ஆக., 30ல் துபாய் சென்றார். அவருடன், இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். துபாய் மருத்துவமனையில், லண்டன் டாக்டர் ஒருவர் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே, விஜயகாந்த் மனைவி

சென்னை--தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சை முடித்து, நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.



latest tamil news


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, ஆக., 30ல் துபாய் சென்றார். அவருடன், இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். துபாய் மருத்துவமனையில், லண்டன் டாக்டர் ஒருவர் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 3ம் தேதி துபாய் சென்றார். நலமுடன் இருப்பதாகக் கூறி, சிகிச்சைக்கு உதவும் செவிலியர்களுடன் எடுத்த புகைப்படத்தை விஜயகாந்த் வெளியிட்டார்.


latest tamil news


இந்நிலையில், விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவுடன், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, துபாயிலிருந்து வரும், 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானத்தில் சென்னை திரும்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
12-செப்-202118:00:13 IST Report Abuse
DVRR தலையில் குல்லாய் வாயில் முகக்கவசம் தள்ளுவண்டி அந்த காட்சி தான் டிவியில் காண்பித்து விட்டார்களே அதிலிருந்தே அவர் நிலைமை நன்றாக தெரிந்து விட்டது
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
12-செப்-202116:28:50 IST Report Abuse
Kumar சொத்து எதாவது வாங்க போய் இருப்பார்கள்,திராவிட கொடுக்குகள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202112:03:51 IST Report Abuse
vpurushothaman இங்கே அண்ணியார் பேரம் பேச வேண்டிய பெரிய வேலையெல்லாம் இருக்கும்போது கேப்டன் வெளியிலிருந்தால் தோதுப்படாதே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X