பொது செய்தி

இந்தியா

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் உத்தரவின்பேரில், நாடு முழுதும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் வழிகாட்டுதலில், புதுச்சேரி, காரைக்கால்,
 தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

.தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் உத்தரவின்பேரில், நாடு முழுதும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் வழிகாட்டுதலில், புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.புதுச்சேரியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற துவக்க நிகழ்ச்சியில், மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் மாவட்ட நீதிபதி சோபனாதேவி வரவேற்றார்.புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார்.

முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துவேல், செயலர் தாமோதரன், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.புதுச்சேரி நீதிமன்றத்தில் 9 அமர்வு, காரைக்காலில் 3 அமர்வு, புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய அலுவலகம், மாகி, ஏனாமில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 15 அமர்வுகள் செயல்பட்டன.இந்த அமர்வுகளில் சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்ககள், ஜீவனாம்ச வழங்குகள், சிவில் வழக்ககள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் என மொத்தம் 3,368 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த கிரைய உடன்படிக்கையின் பேரில் தாக்கல் செய்த வழக்கில் ரூ.91 லட்சம் சமாதான முறையில் தீர்வு காணப்பட்டது. மேலும், காரைக்காலில் நிலுவையில் இருந்த 7 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பிரிந்து வாழ்ந்த இரு தம்பதிகள், மக்கள் நீதிமன்ற சமரச பேச்சினால் சேர்ந்து வாழ சம்மதித்தனர்.மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் 15 அமர்வுகளில் 1,515 வழக்குகளில், ரூ. 4 கோடியே 83 லட்சத்து 64 ஆயிரத்து 407க்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X