இந்தியா

எண்ணிக்கையை அதிகரித்த பிறகு போலீசாருக்கு வார விடுமுறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள காவல் துறை அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்' என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் விழாவில், உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:பெறுவதை காட்டிலும், கொடுப்பதில் தான் மகிழ்ச்சி இருக் கிறது. முதல்வர் ரங்கசாமி அதனை சரியாக உணர்ந்து, கொடுத்து

புதுச்சேரி : 'குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள காவல் துறை அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்' என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் விழாவில், உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:பெறுவதை காட்டிலும், கொடுப்பதில் தான் மகிழ்ச்சி இருக் கிறது. முதல்வர் ரங்கசாமி அதனை சரியாக உணர்ந்து, கொடுத்து வருகிறார்.அதனால் 17 ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு பதவி உயர்வு இன்றைக்கு சாத்தியமாகி உள்ளது.முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்ற பிறகு, எந்தெந்த நல்ல திட்டங்கள் தடைபட்டு உள்ளது என்பதை கண்டறிந்து, அதனை காலதாமதம் இல்லாமல் செய்து முடித்து வருகிறார்.அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கஞ்சாவை ஒழிக்க 'ஆப்பரேஷன் விடியல்' ஏற்படுத்தி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால்தான் புதுச்சேரி வரலாற்றில் இல்லாத அளவிற்கு மூன்று மாதத்திற்குள் கஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் போலீசாரை பாராட்டுகிறேன்.புதுச்சேரியில் சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவல் துறை அதிகாரிகள்குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.புதுச்சேரி போலீசாருக்கு வார விடுமுறை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. காவல் துறையில் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எண்ணிக்கை அதிகரித்து பலப்படுத்திய பிறகு, போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வருடன் பேசி, கொள்கை முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X