இந்தியா

பத்ம விருதுகளுக்கான பரிந்துரை

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு, மாநில அரசு மற்றும் நேரடியாக இணையம் மூலம் பரிந்துரைகள் பெறப்படுகின்றன.புதுச்சேரி மாநிலத்தில் இவ்விருதிற்கான பரிந்துரைகள் செய்தி, விளம்பரத் துறை வாயிலாக பெறப்பட்டது. மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களில்
 பத்ம விருதுகளுக்கான பரிந்துரை

புதுச்சேரி : பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு, மாநில அரசு மற்றும் நேரடியாக இணையம் மூலம் பரிந்துரைகள் பெறப்படுகின்றன.புதுச்சேரி மாநிலத்தில் இவ்விருதிற்கான பரிந்துரைகள் செய்தி, விளம்பரத் துறை வாயிலாக பெறப்பட்டது. மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவர்களில் இருந்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்கான பட்டியல் குறித்த ஆய்வு கூட்டம், சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது.

சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் இலக்கியம், மருத்துவம், அறிவியல் கண்டுபிடிப்பு, சமூக சேவை உள்பட பல்வேறு பிரிவுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது ஆய்வு நடந்தது.இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மத்திய அரசு நேரடியாக இணையம் மூலம் பெற்ற பரிந்துரைகளில், முதல்வர் ரங்கசாமி பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X