பொது செய்தி

தமிழ்நாடு

வைகை கரைகளில் சங்க பூங்காக்கள்

Added : செப் 12, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்நடக்கும் பணிகளை கமிஷனர்கார்த்திகேயனுடன் ஆய்வு செய்த எம்.பி., வெங்கடேசன், ''வைகை கரைகளில் சங்க பூங்காக்கள்அமைக்கப்படும்,'' என்றார்.அவர் கூறியதாவது: செப்.17ல் ஸ்மார்ட் சிட்டி ஆலேசானை கூட்டம் நடப்பதை முன்னிட்டு பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. வைகை கரைகளில் இரண்டு இடங்களில் சங்க இலக்கியத்தில் பரிபாடலின் 9 பாடல்களை

மதுரை-மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்நடக்கும் பணிகளை கமிஷனர்கார்த்திகேயனுடன் ஆய்வு செய்த எம்.பி., வெங்கடேசன், ''வைகை கரைகளில் சங்க பூங்காக்கள்அமைக்கப்படும்,'' என்றார்.அவர் கூறியதாவது: செப்.17ல் ஸ்மார்ட் சிட்டி ஆலேசானை கூட்டம் நடப்பதை முன்னிட்டு பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. வைகை கரைகளில் இரண்டு இடங்களில் சங்க இலக்கியத்தில் பரிபாடலின் 9 பாடல்களை அடிப்படையாக கொண்ட சங்க பூங்காக்கள் அமைக்கப்படும்.மதுரை வரலாற்றைகுறிக்கும் ஓவியங்கள் வரையஇடவசதி உள்ள இடங்களில் சங்க இலக்கிய ஓவியங்கள் வரைந்து, நகரின் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்படும். உள்பகுதியில் உடற்பயிற்சி கூடமும்அமைகிறது.நடைபயிற்சி, சைக்கிளிங் செல்ல வண்ண விளக்குகள் அமைக்க ஆய்வு நடக்கிறது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டில் உள்ளது. இனி கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.நகர் பொறியாளர் சுகந்தி (பொறுப்பு), செயற்பொறியாளர்கள் அரசு, கருப்பாத்தாள், சேகர், உதவி செயற் பொறியாளர் ஆரோக்கியசேவியர், முருகேசபாண்டியன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X