பொது செய்தி

இந்தியா

ஐ.ஆர்.பி.என்., பிரிவில் கூடுதல் போலீசார் நியமனம் முதல்வர் ரங்கசாமி தகவல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஐ.ஆர்.பி.என்., பிரிவில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி மாநில காவல் துறையில், ஐ.ஆர்.பி.என்., பிரிவு 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரிவுக்கு அந்த ஆண்டே 700 கான்ஸ்டபிள்கள் நியமிக்கப் பட்டனர். கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஐ.ஆர்.பி.என்., கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு இல்லாமல் இருந்து வந்தது.அவர்களுக்கு
 ஐ.ஆர்.பி.என்., பிரிவில் கூடுதல் போலீசார் நியமனம்   முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : ஐ.ஆர்.பி.என்., பிரிவில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி மாநில காவல் துறையில், ஐ.ஆர்.பி.என்., பிரிவு 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இப்பிரிவுக்கு அந்த ஆண்டே 700 கான்ஸ்டபிள்கள் நியமிக்கப் பட்டனர். கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஐ.ஆர்.பி.என்., கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு இல்லாமல் இருந்து வந்தது.அவர்களுக்கு சிறப்புநிலை ஏட்டுகளாக பதவி உயர்வு அளிக்க, அண்மையில் அரசு உத்தரவிட்டது. இதற்கான விழா, கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.ஏ.டி.ஜி.பி., ஆனந்த் மோகன் வரவேற்றார். டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிருஷ்ணியா முன்னிலை வகித்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு நிலையில் பதவி உயர்வு பெற்ற 431 பேருக்கு பேட்ஜ் அணிவித்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:எங்களது அரசு பொறுப்பேற்ற உடன், 'அனைத்து துறை அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதனால் சரியாக பணி செய்ய முடியவில்லை' என்றனர்.அந்த பிரச்னையை போக்கும் வகையில், எங்கள் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 ஆயிரம் அரசு ஊழியர் காலியிடங்கள் நிரப் பப்படும் என உறுதியாக சொல்லி இருக்கிறோம்.10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடியுமா என சிலர் கேட்கின்றனர்.

நிச்சயமாக முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.அந்த அடிப்படையில் தான் 17 ஆண்டுகளாக காத்திருந்த ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது.அதேபோல் காவல் துறையில் உள்ள அனைவருக்கும் பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு கிடைத்தால் தான், நன்றாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.காவல் துறையில் அதிகமான பணியிடங்களை நிரப்ப உள்ளோம். விண்ணப்பம் பெறப்பட்ட 380 காவலர் பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவிட்டுள்ளேன். இரண்டு மாதத்திற்குள் நிரப்பப்படும் என டி.ஜி.பி., உத்தரவாதம் அளித்துள்ளார்.காவல் துறையை நம்பி தான் மக்கள் உள்ளனர். காவலர்களின் பணியை பொறுத்து தான் குற்றங்கள் குறையும். ஐ.ஆர்.பி.என்., பிரிவில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும்.

அதற்கு காவலர்கள் முழு வீச்சில் உதவ வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில் அரசு கொறடா நேரு, சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., பிரதீக் ஷா கோடரா, எஸ்.பி.,க்கள்., இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.தமிழில் பேசிய டி.ஜி.பி.,போலீஸ் டி.ஜி.பி.,யாக உள்ள ரன்வீர் சிங் கிருஷ்ணியா, தமிழ் மொழி கற்று வருகிறார். நேற்று முதல்வர், உள்துறை அமைச்சரை வரவேற்று விழா மேடையில் 5 நிமிடங்கள் தமிழில் பேசி அசத்தினார். விழாவில் பங்கேற்ற அனைத்து காவலர்களும் கைதட்டி, டி.ஜி.பி.,க்கு பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X