வாலிபர் கொலையில் கைதுமதுரை: எச்.எம்.எஸ்., காலனி புதுவாழ்வு நகர் 4வது தெருவில் கட்டுமான பணி நடக்கிறது. இதன் வாட்ச்மேன் கணேசன். மணல் இடையூறாக கொட்டப்பட்டது தொடர்பாக அடுத்த கட்டடத்தில் வசிக்கும் அருண்குமாருக்கும், கணேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கணேசன் தாக்கப்பட்டார். தகவல் அறிந்த அவரது மகன் கவுதம் தனது நண்பர்களுடன் வந்து அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கவுதம் நண்பர் காளவாசல் பாண்டியன் நகர் விக்னேஸ்வரன் 22, மார்பில் கத்திக்குத்து விழுந்து இறந்தார். அருண்குமார் கைது செய்யப்பட்டார்.டூவீலர் மோதி முதியவர் பலிஆஸ்டின்பட்டி: உச்சபட்டி பெரியசாமி 60, சம்பக்குளம் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அதே பகுதி முருகன் ஓட்டி சென்ற டூவீலர் பெரியசாமி மீது மோதியது. காயமுற்ற அவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்ற 2 பேர் கைதுபேரையூர்: கணவாய்பட்டியில் மது விற்ற ஒச்சாதேவர் 34, அல்லிகுண்டத்தில் மது விற்ற ராஜாராமை 34, சேடபட்டி போலீசார் கைது செய்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.305 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைதுஉசிலம்பட்டி: எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நந்தவன தெருவில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்த அன்னம்பாரிபட்டி அசோக் 35, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 305 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE