பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி தொகை அறிவிப்பு   வர்த்தக சங்கம் வரவேற்பு 

Added : செப் 12, 2021
Share
Advertisement
மதுரை -ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிலுவை தொகை ரூ.56,027 கோடி இந்த நிதியாண்டில் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: இந்த நிலுவையில் எம்.இ.ஐ.எஸ்., எஸ்.இ.ஐ.எஸ்., ஆர்.ஓ.எஸ்.எல்., ஆர்.எஸ்.சி.டி.எல்., ஆகியவற்றின் நிவாரணம், அரசின் முந்தைய ஏற்றுமதி

மதுரை -ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிலுவை தொகை ரூ.56,027 கோடி இந்த நிதியாண்டில் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: இந்த நிலுவையில் எம்.இ.ஐ.எஸ்., எஸ்.இ.ஐ.எஸ்., ஆர்.ஓ.எஸ்.எல்., ஆர்.எஸ்.சி.டி.எல்., ஆகியவற்றின் நிவாரணம், அரசின் முந்தைய ஏற்றுமதி ஊக்க கொள்கை மற்றும் 2021ல் 4வது காலாண்டிற்குரிய உரிமை கோரல்கள் அடங்கும்.அனைத்து ஏற்றுமதி நிலுவை தொகைகளும் இந்த நிதியாண்டிற்குள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதால் ஏற்றுமதி வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெறும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு இது நிவாரணம். பண்டிகை காலத்திற்கு கூடுதல் ஏற்றுமதி ஆர்டர்களும் கிடைக்கும்.இந்த அறிவிப்பை வரவேற்பதுடன் கொள்கலன் பற்றாக்குறை, கப்பல் சரக்கு கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி வர்த்தகத்தை காக்க மத்திய வர்த்தக, தொழில் அமைச்சகம் ஆவண செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X