பொது செய்தி

தமிழ்நாடு

நஷ்டத்தில் ஆழ்கடல் படகுகள் அரசிடம் ஒப்படைக்க முடிவு

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
ராமேஸ்வரம் : ஆழ்கடல் படகினால் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையில் சிக்கி உள்ளதால் இப்படகை அரசிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் சங்க கூட்டத்தில்,'மத்திய மாநில அரசு ரூ.56 லட்சம் மானியம்,வங்கி கடன் ரூ. 20 லட்சம், மீனவர் பங்களிப்பு ரூ.4 லட்சத்துடன் தலா ரூ.80 லட்சத்தில் 31 ஆழ்கடல் படகுகளை மீனவர்களுக்கு வழங்கினர்.ஒரு படகிற்கு கூடுதலாக

ராமேஸ்வரம் : ஆழ்கடல் படகினால் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையில் சிக்கி உள்ளதால் இப்படகை அரசிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.



latest tamil news


ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் சங்க கூட்டத்தில்,'மத்திய மாநில அரசு ரூ.56 லட்சம் மானியம்,வங்கி கடன் ரூ. 20 லட்சம், மீனவர் பங்களிப்பு ரூ.4 லட்சத்துடன் தலா ரூ.80 லட்சத்தில் 31 ஆழ்கடல் படகுகளை மீனவர்களுக்கு வழங்கினர்.ஒரு படகிற்கு கூடுதலாக ரூ. 40 லட்சம் முதலீடு செய்து உள்ளோம். இப்படகை நிறுத்தி மீன்களை இறக்க, பழுது நீக்க எந்த துறைமுகத்திலும் அனுமதி இல்லை.பாம்பன், மூக்கையூரில் அமைத்த துறைமுகத்தில் துாண்டில் வளைவு பாலம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சம் இல்லாததால், அங்கு படகுகளை நிறுத்த முடியாத அவலம் உள்ளது.


latest tamil news


இப்படகில் ரூ.20 லட்சத்தில் தூண்டில் வின்ச், சில தளவாட பொருட்கள் பொருத்தி பயன்படாமல் உள்ளதால், நிதி வீணானது. மேலும் ஒரு கிலோ சூரை மீன் ரூ. 50 முதல் 60 வரை வியாபாரிகள் வாங்குகின்றனர்.டீசல் விலை உயர்வு, 1800 லிட்டர் மானிய டீசல் போதுமானதாக இல்லாததால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் வங்கி கடன், தனியாரிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் உள்ளோம்.எனவே மானிய டீசல் அளவை கூடுதலாக வழங்கி, வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் படகுகளை அரசிடம் ஒப்படைப்பது என தீர்மானத்தில் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
12-செப்-202114:17:48 IST Report Abuse
செல்வம் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள். விடியல் அதையும் வித்து தின்னு கேட்டா படகை நெத்திலி மீன்கள் கூட்டமாக வந்து சாப்பிட்டு விட்டது என்பான்..
Rate this:
Cancel
12-செப்-202113:06:58 IST Report Abuse
ஆரூர் ரங் மீன்களின் சாபமோ 🤣
Rate this:
Cancel
12-செப்-202112:12:45 IST Report Abuse
ஆரூர் ரங் நம்ம விடியலூ😎 கிட்ட மனு கொடுத்திருந்தால் திருப்பூரில் மீன்பிடி துறைமுகம் கட்டித்😉🙃 தந்திருப்பாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X