பொது செய்தி

இந்தியா

'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி; கூடுதல் தரவுகள் தேவை; உலக சுகாதார அமைப்பு

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத் : 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க, மேலும் சில தரவுகளை, அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரி உள்ளது.நம் நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இங்கு இந்த தடுப்பூசிகளை தயாரிக்க ஏழு இந்திய நிறுவனங்களுடன், ரஷ்ய நேரடி முதலீடு நிதியம்

ஐதராபாத் : 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க, மேலும் சில தரவுகளை, அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரி உள்ளது.



latest tamil news




நம் நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இங்கு இந்த தடுப்பூசிகளை தயாரிக்க ஏழு இந்திய நிறுவனங்களுடன், ரஷ்ய நேரடி முதலீடு நிதியம் ஒப்பந்தம் செய்து உள்ளது.இதையடுத்து, ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் - வி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. இந்த தடுப்பூசியை, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் 'டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ்' நிறுவனம் வினியோகித்து வருகிறது.


latest tamil news




இந்த ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் பட்டியலில் இணைக்கக் கோரி, உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை நேற்று பரிசீலித்த உலக சுகாதார அமைப்பு, ஸ்புட்னிக் - வி தடுப்பூசி குறித்த மேலும் சில தரவுகளை சமர்ப்பிக்கக் கோரி, அதன் தயாரிப்பு நிறுவனமான, 'கமாலியா' தேசிய ஆராய்ச்சி நிறுவனத் திடம் கேட்டுள்ளது.'அனைத்து தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்ட பின்பே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
12-செப்-202107:01:54 IST Report Abuse
மதுரை விருமாண்டி கூடுதல் வரவுகள், பிஎம் கேர்ஸ், மோடி இல்லம், புதுடெல்லி. இந்துயாவில் கண்ட ஊசி, மருந்தை சோதனை பண்ண தரவு தேவையில்லை. பாஜாக்கா உண்டியல் வரவு தான் முக்கியம் 🤪
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X