பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டு கொண்டால் தங்க மோதிரம் பரிசு

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று, 1,004 கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனுார் கிராமத்தில், இன்று, (12ல்,) நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம், 100 சதவீத இலக்கை எட்டுவது குறித்து, வி.ஏ.ஓ.,

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று, 1,004 கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனுார் கிராமத்தில், இன்று, (12ல்,) நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம், 100 சதவீத இலக்கை எட்டுவது குறித்து, வி.ஏ.ஓ., சம்பத் தலைமையில், பஞ்., தலைவர், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், தடுப்பூசி போட்டு கொள்பவர்களை ஊக்குப்படுத்தும் வகையில், முகாம் முடிவில் தடுப்பூசி போட்டு கொண்ட அதிர்ஷ்டசாலிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் பரிசாக, இரண்டு கிராம் தங்க மோதிரம், இரண்டாவது பரிசாக எவர்சில்வர் அண்டா, மூன்றவாது பரிசாக செம்பு குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என, அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X