தனியாரும் பொதுத் துறையும் கைகோர்க்க வேண்டியது அவசியம் : வெங்கையா நாயுடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தனியாரும் பொதுத் துறையும் கைகோர்க்க வேண்டியது அவசியம்' : வெங்கையா நாயுடு

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (20)
Share
சென்னை: ''நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.சென்னையில் நேற்று நடந்த, 'ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ்' பவள விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி
 'தனியாரும் பொதுத் துறையும் கைகோர்க்க வேண்டியது அவசியம்' : வெங்கையா நாயுடு

சென்னை: ''நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னையில் நேற்று நடந்த, 'ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ்' பவள விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன.பொருளாதார வளர்ச்சியை துாண்டுவதற்கு உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பொதுத் துறை- மற்றும் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பது அவசியம்.கொரோனா இரண்டாவது அலை மறுமலர்ச்சியை மெத்தனப்படுத்தினாலும், இந்திய பொருளாதாரம் மீண்டு வந்து, மீட்புப் பாதையில் உறுதியாக உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.


latest tamil news



தடுப்பூசி எடுப்பது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டுக்கு ஆற்றும் புனித செயல்.பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இந்தியா நிற்கிறது. அனைத்து குறியீடுகளும், வரவிருக்கும் மாதங்களில் நீண்ட காலவளர்ச்சி மற்றும் மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன.வெவ்வேறு குறியீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி, 2021 - -22ம் ஆண்டிற்கான, 9.5 சதவீத வளர்ச்சியை மாற்றமின்றி, அப்படியே தக்க வைத்துள்ளது.வலுவான பொருளாதார அடிப்படைகள், முன்னோக்கி பார்க்கும் சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டை குவித்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் காரணமாக, இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில், பெருமளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். அறிவியல், மனித வளமும் அதிகம் உள்ளது.ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் வாயிலாக, புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற, சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில், அதிககவனம் செலுத்த வேண்டும்.இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும். இதுபோன்ற கூட்டு முயற்சிகள் மேற்கொள்வதை எளிதாக்குவதில், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் போன்ற அமைப்புகள் முனைப்பான பங்கு வகிக்கவேண்டும்.தமிழக மக்கள் திறமையான, கடினமான உழைப்பாளிகள். முதலீட்டாளருக்கு சாதகமான அரசுடன், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன், முதலீடு செய்வதற்கு கவர்ச்சிகரமான இடமாக தமிழகம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X