இன்று தடுப்பூசி தவற விடாதீங்க! தொழில் துறையினர் சுற்றறிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தடுப்பூசி தவற விடாதீங்க! தொழில் துறையினர் சுற்றறிக்கை

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
கோவை:கோவையில், 1,475 இடங்களில் இன்று 'மெகா' தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன.கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறும்போது, ''காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. தொழிலாளர்கள் இதற்கென விடுமுறை எடுக்க அவசியமில்லை. ''ஏதேனும் ஒரு 'ஷிப்ட்'டில் பணியாளர்களை அழைத்து வந்து ஊசி போடலாம். முன்கூட்டியே தொழிலாளர் வரும் நேரத்தை தெரிவித்தால் அதற்கேற்ப ஏற்பாடுகள்

கோவை:கோவையில், 1,475 இடங்களில் இன்று 'மெகா' தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன.கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறும்போது, ''காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. தொழிலாளர்கள் இதற்கென விடுமுறை எடுக்க அவசியமில்லை. ''ஏதேனும் ஒரு 'ஷிப்ட்'டில் பணியாளர்களை அழைத்து வந்து ஊசி போடலாம். முன்கூட்டியே தொழிலாளர் வரும் நேரத்தை தெரிவித்தால் அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யலாம்,'' என்றார்.மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர்(கொடிசியா) ரமேஷ்பாபு கூறுகையில், ''கோவையில் உள்ள, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், 90 சதவீதம் பேர் முதல் 'டோஸ்', 30 சதவீதம் பேர் இரண்டாவது 'டோஸ்' செலுத்தியுள்ளனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகுதான் இரண்டாவது டோஸ் செலுத்த முடியும் என்பதால், நாளைய(இன்று) முகாமில் பலருக்கு ஊசி போடமுடியாது.எனவே, வரும், 15ம் தேதிக்கு பிறகு தடுப்பூசி ஒதுக்க கோரியுள்ளோம். முதல் தவணை செலுத்தாத, 10 சதவீதம் பேரும் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். அருகேயுள்ள முகாம்களுக்கு சென்று தவறாது ஊசி போடவும் எங்களது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X