பொது செய்தி

தமிழ்நாடு

கோவை அதிகாரிகள் விரைவில் கூண்டோடு மாற்றம்! பல்வேறு துறைகளிலும் பரவுகிறது பயம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில், முக்கியமான அதிகாரிகள் பலரும் கூண்டோடு மாற்றப்படுவர் என்ற தகவல் பரவி வருகிறது.சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோல்வியைத் தழுவியது. தேர்தலின்போது அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகப் பணியாற்றியவர்கள், அ.தி.மு.க., அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள், நல்ல இடங்களில்

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில், முக்கியமான அதிகாரிகள் பலரும் கூண்டோடு மாற்றப்படுவர் என்ற தகவல் பரவி வருகிறது.சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோல்வியைத் தழுவியது. தேர்தலின்போது அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகப் பணியாற்றியவர்கள், அ.தி.மு.க., அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள், நல்ல இடங்களில் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு விசுவாசமாக பல வேலைகளைச் செய்தவர்கள், ஊழலில் துணை போன அதிகாரிகள் என பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த துறை தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், ஐ.ஜி., உள்ளிட்ட மண்டலம் மற்றும் மாவட்ட அளவிலான உயரதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு விட்டனர். அதற்கு அடுத்த நிலையிலுள்ள சில அதிகாரிகளும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.ஆனால் மாநகராட்சி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பதிவுத்துறை, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட மக்களுடன் நேரடித்தொடர்பிலுள்ள பல்வேறு அரசுத்துறைகளில் முக்கிய அலுவலர்கள், பொறியாளர்கள் இன்னும் மாற்றப்படவில்லை.இவர்களில் பெரும்பாலானவர்கள், முந்தைய ஆட்சியின்போது, இந்தப் பணிகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். பலர் இதற்காக பெரும்தொகை கொடுத்து, பசையுள்ள பொறுப்புகளை வாங்கி, அதை அறுவடையும் செய்துள்ளனர். சில அதிகாரிகளுக்கு, தற்போது விசாரணையிலுள்ள பல்வேறு ஊழல் விவகாரங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகள் உள்ளன. இதுகுறித்த விபரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேகரித்துள்ளனர்.குறிப்பிட்ட சில அலுவலகங்களில் அல்லது துறைகளில், பல ஆண்டுகளாகப் பணியாற்றும் பலரையும் வேறு மாவட்டங்கள், வேறு மாநகராட்சிகளுக்கு மாற்றுவதற்கு, தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், அது முடிந்த பின் கோவை மாவட்டத்தில் கூண்டோடு அதிகாரிகள் மாற்றப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எங்கே நம்மை துாக்கி அடிப்பார்களோ என்ற பயமும் பதற்றமும், பல்வேறு துறை அகாரிகளிடம் பரவி வருகிறது.-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X