பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் தள்ளுபடி நாளை அறிவிப்பு?

Added : செப் 12, 2021
Share
Advertisement
சென்னை:கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. இதனால் பலரும் அந்த வங்கிகளில் நகைக் கடன் வாங்குகின்றனர்.சட்டசபை

சென்னை:கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. இதனால் பலரும் அந்த வங்கிகளில் நகைக் கடன் வாங்குகின்றனர்.சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை விரைந்து செயல்படுத்துமாறு பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்காக, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக் கடன் பெற்றவர்களின் விபரங்களை கூட்டுறவுத் துறை சேகரித்துள்ளது. அதில் 61 லட்சம் பேர், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரச்னை வரும்?சில நபர்கள், அதிக எடை உள்ள நகைகளை ௫ சவரன் நகைகளாக பிரித்து, பல கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ளனர். இதனால், 'ஆதார்' எண் அடிப்படையில் சரிபார்த்து, ஒருவருக்கு ஒரு கடனை மட்டும் தள்ளுபடி செய்யும் வகையில் நிபந்தனை விதிக்கப்படலாம்.ஆனால், பயனாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க, 'அரசு ஊழியர்களுக்கு கிடையாது; வருமான வரி செலுத்தினால் கிடையாது' என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை, கூட்டுறவுத் துறைக்கு சம்பந்தம் இல்லாத சில அதிகாரிகள் வகுத்து வருகின்றனர். இதனால், தள்ளுபடி அறிவிப்பில் பயன் கிடைக்காதோர், வங்கிகளை முற்றுகையிட்டு பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது.அதற்கு இடம் தராத வகையில், அனைத்து கட்சிகள், பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து, நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்கின்றனர், கூட்டுறவு வங்கி அதிகாரிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X