படைவீரர் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் இடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

படைவீரர் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் இடம்

Added : செப் 12, 2021
Share
மதுரை:படைவீரர்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் வாரிசுகளுக்கு தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க முன்னுரிமை பட்டியலை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சொக்கபடப்பு குறளரசன்,'

மதுரை:படைவீரர்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் வாரிசுகளுக்கு தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க முன்னுரிமை பட்டியலை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சொக்கபடப்பு குறளரசன்,' பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு மறுத்து தமிழக சுகாதாரத்துறை 2018 ஜூன் 1 ல் அரசாணை வெளியிட்டது. அதை ரத்து செய்து, பணியில் உள்ள படைப்பிரிவு வீரர்களின் வாரிசுக்கும் ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.கடந்த 2019 ல் தனி நீதிபதி: மருத்துவம், தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வி சாராத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு அல்லது முன்னுரிமை வழங்க 2017 நவ.,30 ல் மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.முன்னாள் படைவீரர், இறந்தவர், படையில் பணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி தமிழக அரசு 1979 ல் அரசாணை வெளியிட்டது. இதை 2018 ல் வெளியான அரசாணையில் தெரிவிக்கவில்லை. இந்த அரசாணை சட்ட விரோதம். அதை ரத்து செய்கிறேன். பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகளை இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,சேர்க்கையில் அனுமதிக்க வேண்டும்.இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் என்.கிருபாகரன் - தற்போது பணி ஓய்வு, பி.புகழேந்தி உத்தரவு:சுட்டெரிக்கும் வெயில் மற்றும் உறைபனி குளிரில் எல்லையை படைவீரர்கள் பாதுகாக்கின்றனர். அவர்கள் துாங்காமல் பாதுகாப்பில் ஈடுபடுவதால்தான் நாம் வீடுகளுக்குள் பாதுகாப்பாக துாங்குகிறோம். படை வீரர்கள் தன்னலமற்ற சேவை செய்கின்றனர். பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகளை மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு புறக்கணிப்பது அதிர்ச்சியளிக்கிறது.பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பஞ்சாபில் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பணியில் உள்ள படைவீரர்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் வாரிசுகளுக்கு தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்பில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து பலன்பெறும் வகையில் முன்னுரிமை பட்டியலை மத்திய அரசு 12 வாரங்களில் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள காரணங்கள் ஏற்புடையதே. அதில் குறைபாடு இல்லை. மனுவை பைசல் செய்கிறோம்இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X