அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தியாவில் குடியுரிமை இலங்கை எம்.பி., பேட்டி

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருச்சி;''இலங்கையின் மலையக மக்களுக்கு, இங்கு குடியுரிமை வழங்கி, இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என, இலங்கை எம்.பி., ராதாகிருஷ்ணன் கூறினார்.இலங்கையின் மலையக மக்கள் முன்னணி தலைவரும், இலங்கை எம்.பி.,யுமான ராதாகிருஷ்ணன், திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:இலங்கையில், புதிய அரசு தேர்வு செய்யப்பட்ட ஓராண்டில், தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில்,

திருச்சி;''இலங்கையின் மலையக மக்களுக்கு, இங்கு குடியுரிமை வழங்கி, இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என, இலங்கை எம்.பி., ராதாகிருஷ்ணன் கூறினார்.இலங்கையின் மலையக மக்கள் முன்னணி தலைவரும், இலங்கை எம்.பி.,யுமான ராதாகிருஷ்ணன், திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:இலங்கையில், புதிய அரசு தேர்வு செய்யப்பட்ட ஓராண்டில், தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில், சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்பு, வசதிகள் கிடைக்கவில்லை.தமிழகத்தில் அகதிகள் முகாம் என்பதை, 'தமிழர்கள் மாறுவாழ்வு இல்லம்,' என்று மாற்றி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள முதல்வர், தமிழக முதல்வர்களில், ஒரு முன்னோடியாக செயல்படுகிறார். இலங்கை மலையக மக்களுக்கு, இங்கு குடியுரிமை வழங்கி, இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தரப்பில் இருந்தும் அதற்கான உதவிகள் கிடைக்கும்.இலங்கையில், பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு தட்டுப்பாடு இருக்கிறது. அதை உணவு பஞ்சம் என்று சொல்லி விட முடியாது.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், இந்திய வம்சாவளி இரட்டை குடியுரிமை வழங்கும் சட்டம் உள்ளது. அதே போல், இலங்கையும், இந்தியாவும் வழங்குவதில் ஆட்சேபணை இல்லை.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், இலங்கை மக்களுக்கு சாதமாக இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X