சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓமனில் தற்கொலை முயற்சி: சென்னையில் தீவிர சிகிச்சை

Added : செப் 12, 2021
Share
Advertisement
சென்னை:ஓமன் நாட்டில் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் இருந்தவர், சென்னை கொண்டு வரப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருப்பூரைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமான பணி வழங்கி, சரியான உணவு, தங்குமிட வசதிகள் இன்றி, கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால், 'வேலை வேண்டாம்; இந்தியாவிற்கு

சென்னை:ஓமன் நாட்டில் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் இருந்தவர், சென்னை கொண்டு வரப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருப்பூரைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமான பணி வழங்கி, சரியான உணவு, தங்குமிட வசதிகள் இன்றி, கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால், 'வேலை வேண்டாம்; இந்தியாவிற்கு அனுப்புங்கள்' என்று பணிபுரியும் நிறுவனத்திடம், தினேஷ் கேட்டுள்ளார்.'இரண்டு ஆண்டுக்கு முன் அனுப்ப முடியாது' எனக்கூறி, பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து, மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், சில தினங்களுக்கு முன் கட்டட மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். படுகாயமடைந்த அவர், ஓமன் நாட்டு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, தினேஷ் குடும்பத்தினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அவரை இந்தியா அழைத்து வர கோரிக்கை வைத்தனர்.அவரை அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார்.அதன்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையினர், ஓமனில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளுடன் பேசி, உரிய ஏற்பாடுகளை செய்தனர்.இதையடுத்து, ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில், தினேஷ்பாபு அழைத்து வரப்பட்டார். அதன்பின், சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X