சென்னை திரும்பினார் விஜயகாந்த்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை திரும்பினார் விஜயகாந்த்

Added : செப் 12, 2021
Share
சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சை முடித்து, நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, ஆக., 30ல் துபாய் சென்றார். அவருடன், இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். துபாய் மருத்துவமனையில், லண்டன் டாக்டர் ஒருவர் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது.இதற்கிடையே, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 3ம்

சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சை முடித்து, நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, ஆக., 30ல் துபாய் சென்றார். அவருடன், இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். துபாய் மருத்துவமனையில், லண்டன் டாக்டர் ஒருவர் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது.இதற்கிடையே, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 3ம் தேதி துபாய் சென்றார். நலமுடன் இருப்பதாகக் கூறி, சிகிச்சைக்கு உதவும் செவிலியர்களுடன் எடுத்த புகைப்படத்தை விஜயகாந்த் வெளியிட்டார்.இந்நிலையில், விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவுடன், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, துபாயிலிருந்து வரும், 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானத்தில் சென்னை திரும்பினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X