கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலங்கை தமிழருக்கு ரேஷன் பொருட்கள்: முடிந்தது வழக்கு

Added : செப் 12, 2021
Share
Advertisement
சென்னை:முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கும், ரேஷன் பொருட்கள் வழங்கவும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவும் கோரி, டாக்டர் ராமு மணிவண்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப்

சென்னை:முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கும், ரேஷன் பொருட்கள் வழங்கவும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவும் கோரி, டாக்டர் ராமு மணிவண்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஹர்ஷராஜ் ஆஜரானார்.முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:கொரோனா இரண்டாவது அலையின் போது, முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி, இந்த மனு தாக் கல் செய்யப்பட்டது.அடையாள அட்டையை காட்ட வற்புறுத்தாமல், தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் கோரப்பட்டது.தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது. ரேஷன் பொருட்கள் குறித்த கோரிக்கை, இப்போது பொருத்தமானதாக இல்லை.தகுந்த ஆவணத்தை ஒருவர் தாக்கல் செய்தால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X