பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
மேட்டூர்:மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த, 2ல், 68.67 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 76.18 அடி, 31.57 டி.எம்.சி.,யாக இருந்த நீர்இருப்பு, 38.25 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.கடந்த, 10 நாட்களில் நீர்மட்டம், 8 அடி, நீர்

மேட்டூர்:மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த, 2ல், 68.67 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 76.18 அடி, 31.57 டி.எம்.சி.,யாக இருந்த நீர்இருப்பு, 38.25 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.கடந்த, 10 நாட்களில் நீர்மட்டம், 8 அடி, நீர் இருப்பு, 7 டி.எம்.சி., உயர்ந்தது. டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரம் குறைந்ததால் வினாடிக்கு, 5 ஆயிரம் கனஅடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு நேற்று மதியம், 1:00 மணிக்கு, 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.நேற்று முன்தினம் வினாடிக்கு, 11 ஆயிரத்து, 19 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 10 ஆயிரத்து, 515 கனஅடியாக சரிந்தது. நீர் திறப்பு அதிகரித்ததால் வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X