உங்களுக்கு தெரிகிறது... முதல்வருக்கும், தி.மு.க., முன்னணி தலைவர்களுக்கும் தெரிய மாட்டேன் என்கிறதே...

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
'திராவிட மாடல், நான் திராவிட இனம் சார்ந்தவன்' என்றெல்லாம் ஆட்சியாளர்கள் பேசும் போது தான் வெறுப்பு ஏற்படுகிறது; அவர்களோடு முரண்பட்டு வாதம் செய்கிறோம். ஏனெனில், திராவிடம் என்றொரு இனமோ, மொழியோ இல்லை. அதனால் தான் கருணாநிதியே இதுகுறித்து பேசாமல் தவிர்த்து விட்டார்.- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்'உங்களுக்கு தெரிகிறது... முதல்வருக்கும்,
உங்களுக்கு தெரிகிறது... முதல்வருக்கும், தி.மு.க., முன்னணி தலைவர்களுக்கும் தெரிய மாட்டேன் என்கிறதே...

'திராவிட மாடல், நான் திராவிட இனம் சார்ந்தவன்' என்றெல்லாம் ஆட்சியாளர்கள் பேசும் போது தான் வெறுப்பு ஏற்படுகிறது; அவர்களோடு முரண்பட்டு வாதம் செய்கிறோம். ஏனெனில், திராவிடம் என்றொரு இனமோ, மொழியோ இல்லை. அதனால் தான் கருணாநிதியே இதுகுறித்து பேசாமல் தவிர்த்து விட்டார்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'உங்களுக்கு தெரிகிறது... முதல்வருக்கும், தி.மு.க., முன்னணி தலைவர்களுக்கும் தெரிய மாட்டேன் என்கிறதே... எடுத்ததற்கெல்லாம் திராவிடம் என்கின்றனரே...' என, சொல்லத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.பெண்களுக்கு எதிரான கொடூரமான சம்பவங்களை துரிதமாக விசாரித்து, தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காலத்திற்கேற்ற சட்டங்கள் மூலம் இக்கொடுமைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- மக்கள் நீதி மய்ய மாநில செயலர் சினேகா மோகன்தாஸ்


'இதை எல்லாம் யார் செய்ய வேண்டும்; மக்களாகிய நாமா அல்லது அரசா... தனிநபர்கள் ஒழுக்கமாக இருந்தால் சமுதாயம் ஒழுங்காக ஆகி விடும்...' என, கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்ய மாநில செயலர் சினேகா மோகன்தாஸ் அறிக்கை.தமிழக சபாநாயகர் சில குழுக்களை நியமித்துள்ளார். ஆனால், முக்கியமான ஆதி திதிராவிடர் நலக்குழு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலக்குழு, ஊராட்சி கணக்கு ஆய்வு குழுக்களை நியமிக்கவில்லை. உடனடியாக நியமிக்க வேண்டும்.
- தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி


'சபாநாயகருக்கு நினைவுபடுத்தி விட்டீர்கள்; கண்டிப்பாக செய்வார்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி அறிக்கை.தமிழகத்தின் புதிய கவர்னர் ரவி, நம் மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை போன்றே முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி. தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவல் கீழ் பணியாற்றி, வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதத்தை வேரறுத்தவர். இங்கு பிரிவினை பேசித் திரிவோரையும் வேரறுப்பார்.
- தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதா மணி


'வட கிழக்கு மாநில அரசியல் வேறு; தமிழக அரசியல் வேறு. ரவியின் அணுகுமுறை எப்படி என்பது போக போகத் தான் தெரியும்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதா மணி அறிக்கை.வரும் 15ல் அண்ணாதுரை பிறந்த நாளில், தமிழக சிறைகளில் இருக்கும் ஏழு அல்லது பத்தாண்டு தண்டனையை நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'அப்படியே, சிறைச்சாலைகள் கூடாது. குற்றம் செய்தவர்களை, 'சிறையில் அடைக்கப்படுவர்' என கூற வேண்டும்; உடனே விடுவித்து விட வேண்டும் என்றும் முதல்வரிடம் கேளுங்களேன்...' என, விரக்தியை வெளிப்படுத்த துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.ஆப்கனில் தனிபான் அமைச்சரவையில், ஐந்து அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அமைச்சர்களாக உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையில் தலிபான்கள் மீதான தடைகள் கமிட்டியின் தலைவராக இருக்கும் இந்தியா, அந்த அமைச்சர்களை ஏற்றுக் கொள்கிறதா?
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி


latest tamil news
'அமெரிக்காவே, அது அவர்கள் பாடு என ஒதுங்கிக் கொண்டுள்ளது. இந்தியா என்ற தேரை இழுத்து தெருவில் விட முயற்சிக்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.ஜாதி வேறுபாடுகளை களையும் வகையில் ஒரே மயானத்தை பின்பற்றும் கிராமங்களுக்கு, பத்து லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'இதுபோன்ற கிராமங்களில் கண்டிப்பாக கட்சி அரசியல் இருக்காது. வேண்டுமானால் விசாரித்து பாருங்கள். நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கு சில கட்சிகள் தான் காரணம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., ஊட்டி வளர்க்கும் வெறுப்பு அரசியல், டில்லியில் முஸ்லிம் பெண் போலீஸ் அதிகாரி கொடூரமாக சிதைக்கப்பட்டது போன்ற மனிதத்தன்மையே அற்ற செயலை தான் உருவாக்கும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'கம்யூ.,வும் வெறுப்பு அரசியலைத் தானே செய்கிறது... பா.ஜ., மற்றும் ஆதரவு கட்சிகளை பகிரங்கமாக வெறுத்து ஒதுக்குகிறதே...' என, எடுத்துக் கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், அகதிகளுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் வித்தியாசம் தெரியாத மதவாதச் செயல். 2019 இறுதியில் நடத்தப்பட்டது போல, மதவெறி போராட்டங்களை துாண்டும் தீய நோக்கோடு கொண்டு வரப்பட்டுள்ளது
- பா.ஜ., முன்னாள் பொதுச் செயலர் ஹெச்.ராஜா


'அந்த சட்டம் தமிழகத்தில் பின்பற்றப்படும் போது, போராட்டங்கள் நடக்காதே என்ற எண்ணத்தில், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும்...' என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., முன்னாள் பொதுச் செயலர் ஹெச்.ராஜா அறிக்கை.


.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் உலகின் பல நாடுகளில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. இன்னும் கூட விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன்


'இதுபோலத் தான் தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதை ஏன் கட்சிகள் கண்டிக்க மாட்டேன் என்கின்றன...' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
12-செப்-202115:17:51 IST Report Abuse
SUBBU வர வர இந்த சரக்கு மிடுக்கு சீட்டா பாய்ஸ்களின் காமெடி வரைமுறையில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
12-செப்-202113:09:01 IST Report Abuse
Suppan "ஒரே மயானத்தை பின்பற்றும் கிராமங்களுக்கு,..." இப்பத்தான் ஒரு கிறிஸ்தவ சட்டசபை அங்கத்தினர் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களுக்காக அடக்கம் செய்ய சில ஏக்கர் நிலம் கேட்டார். அதை எல்லா மதங்களுக்கும் பொதுவாக ஒதுக்கலாமே? ஒ முடியாதே.. RC ற்கு கொடுத்தால் CSI ஆட்கள் தனியாகக் கேட்பார்கள். அப்புறம் பெந்தேகோஸ்தே.. தலித் கத்தோலிக்கர்கள் ...இப்படி நீண்டு கொண்டே போகுமே.. ராம் சாமி "ஒழித்த" ஜாதிகளை இவர்கள் திரும்பவும் ஒழிக்கப் போகிறார்களாம்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
12-செப்-202112:59:53 IST Report Abuse
Suppan சீமான் அய்யா திராவிடன் என்றால் இவர்கள் அகராதியில் திருடன் என்று பொருள். அதனால்தான் கட்சியின் பெயரிலும் திராவிடத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். பெயருக்கேற்ப நடந்து கொள்கிறார்கள். பாராட்டுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X