பொது செய்தி

தமிழ்நாடு

மருந்துக்காக கொல்லப்படும் முள் எலிகள்: அழியும் நிலையில் அரிய வகை உயிரினம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
சென்னை: மருந்து தயாரிப்புக்காக கொல்லப்படுவதால், அரிய வகை பாலுாட்டி உயிரினமான முள் எலிகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்படுவதாக, வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தாவரங்கள், பாலுாட்டிகள், பறவையினங்கள் என பல்வேறு வகை உயிரினங்கள், அவற்றின் எண்ணிக்கை அடிப்படையில், 'அபாய கட்டத்தில் உள்ளவை' என்ற பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. ஆனால், இந்த பட்டியல்
மருந்துக்காக கொல்லப்படும் முள் எலிகள்:   அழியும் நிலையில் அரிய வகை உயிரினம்

சென்னை: மருந்து தயாரிப்புக்காக கொல்லப்படுவதால், அரிய வகை பாலுாட்டி உயிரினமான முள் எலிகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்படுவதாக, வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தாவரங்கள், பாலுாட்டிகள், பறவையினங்கள் என பல்வேறு வகை உயிரினங்கள், அவற்றின் எண்ணிக்கை அடிப்படையில், 'அபாய கட்டத்தில் உள்ளவை' என்ற பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. ஆனால், இந்த பட்டியல் நிலைக்கு செல்லாமல், ஏராளமான சிறு உயிரினங்கள் உள்ளன. இயற்கை சூழலியல் மற்றும் உயிர் சங்கிலியில், இவற்றின் முக்கியத்துவம் வெளிப்படாமல் போகிறது. அந்த அலட்சியத்தால் சிறிய அளவிலான முள் எலிகள், முயல்கள், தேவாங்கு போன்ற, பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்படுகின்றன.


தைலம்


துாத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் முள் எலிகள் பரவலாக காணப்பட்டன. உள்ளங்கையில் எடுத்து வைத்தால், முள் பந்து போல் சுருங்கிக் கொள்ளும். சாதாரண எலியின் அளவில் இருந்தாலும், வளையும் முதுகெலும்பு, மண்டை ஓடு, இதன் சிறப்பு அமைப்புகளாக உள்ளன. இவற்றின் உடலில் கிடைக்கும் சில பொருட்கள், மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப் படுகின்றன.

இது குறித்து, சென்னை அரும்பாக்கம், சித்த மருத்துவ கல்லுாரி விரிவுரையாளர் பாஸ்கர் கூறியதாவது: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட, சுவாச பிரச்னைகளை தீர்க்க, முள் எலி தைலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, முள் எலி கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.


பாரம்பரிய மருந்து


சித்த மருந்துகள் தயாரிப்பில் பெரும்பாலும் காடுகளில் கிடைக்கும் தாவரங்கள், உயிரினங்களில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பாரம்பரிய மருந்து தயாரிப்பு வழிமுறைகளில், முள் எலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


விழிப்புணர்வு


முள் எலிகள் ஆராய்ச்சியாளர் பிரவின்குமார் கூறியதாவது: முள் எலிகள் பெரும்பாலும் காடுகளை தவிர்த்து, மக்கள் வாழிடங்களை ஒட்டி காணப்படுகின்றன. இது குறித்த முறையான கணக்கெடுப்பு தகவல் தொகுப்பு எதுவும் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் முள் எலிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தற்போது அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றனர். முள் எலி பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கும் அளவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் முள் எலி உள்ளிட்ட பல்வேறு சிறு உயிரினங்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தப்படுவது இல்லை. நாங்கள் தன்னிச்சையாக பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.


வழிமுறை


முள் எலிகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை வனத் துறை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாடப் புத்தகத்தில், இதுபோன்ற உயிரினங்கள் குறித்த தகவலை சேர்க்க அரசு முன்வர வேண்டும். வன உயிரின பாதுகாப்பு பட்டியலில், முள் எலிகள் உள்ளிட்ட உயிரினங்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X