சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தற்கொலை

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (90)
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் பி.வி.சி. பைப் கம்பெனி ஊழியராக வேலை செய்கிறார். இவரது இளையமகன் தனுஷ்(20). இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதினார். இருமுறையும் தோல்வி அடைந்ததால்
neet, exam, student, sucide, நீட் தேர்வு, மாணவர், தற்கொலை

மேட்டூர்: மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் பி.வி.சி. பைப் கம்பெனி ஊழியராக வேலை செய்கிறார். இவரது இளையமகன் தனுஷ்(20). இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதினார். இருமுறையும் தோல்வி அடைந்ததால் மூன்றாவது முறை படித்துக் கொண்டிருந்தார்.


latest tamil news


இன்று மேட்டூர் அடுத்த மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் நீட் தேர்வு நடக்க இருந்தது. இந்த தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தனுஷ் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்


சரியான முடிவு அல்ல


அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: எந்த பிரச்னைக்கும் உயிரை மாய்த்து கொள்வது சரியான முடிவாக இருக்காது. நீட்தேர்வில் விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசு நீட் தேர்வு தீர்மானத்தை நாளை நிறைவேற்ற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.




பழனிசாமி அஞ்சலி


மாணவர் தனுஷ் உடலுக்கு இன்று(செப்.,12) மதியம் 12:30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி மாலை போட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


latest tamil news



பின்னர் செம்மலை கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டசபையில் நாளை சட்ட முன்வடிவு கொண்டு வந்தால் அதுகுறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.



முன்னதாக பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:








மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலும், தனுஷின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.


உதயநிதி நேரில் ஆறுதல்:

நீட் அச்சம் காரணமாக வாலிபர் தனுஷ் தற்கொலை செய்தி அறிந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்துக்கு வந்து மாணவனுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202106:44:52 IST Report Abuse
மோகனசுந்தரம் இந்த முட்டாள் எப்படி 2வில் மெடிக்கல் தேர்ச்சி பெரும் அளவிற்கு மார்க் எடுப்பான்.
Rate this:
Cancel
13-செப்-202106:42:29 IST Report Abuse
மோகனசுந்தரம் இவனை மாதிரி முட்டாள் பயல்கள் நாட்டிற்கு கேடு.
Rate this:
Cancel
13-செப்-202105:09:17 IST Report Abuse
K.R PREM KUMAR தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X