கோழிக்கோடு விமான விபத்திற்கு விமானியின் தவறே காரணம்: விசாரணையில் தகவல்

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛கடந்த ஆண்டு ஆக., மாதம் கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்டதற்கு விமானி செய்த தவறே காரணம்,'' என, விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு ஆக.,7 ல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானம்
கோழிக்கோடு, விபத்து, விமான விபத்து, விசாரணை

புதுடில்லி: ‛‛கடந்த ஆண்டு ஆக., மாதம் கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்டதற்கு விமானி செய்த தவறே காரணம்,'' என, விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆக.,7 ல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 21 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது.


latest tamil news


அதில் கூறப்பட்டு உள்ளதாவது: விமானத்தை தரையிறக்கும் போது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே விமான விபத்து ஏற்பட காரணம். தொழில் நுட்ப கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை புறந்தள்ளி விட முடியாது. விமானத்தை தரையிறக்கிய போது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே இந்த விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம். விமானத்தை தரையிறக்கும் போது, நிலைத்தன்மையற்ற அணுகுமுறைகளை விமானி தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமானத்தை தரையிறக்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால், விமான கண்காணிப்பு தொழில்நுட்ப விமான இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல், தோல்வியடைந்ததும், விமானி விமானத்தை தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஓடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியது, இந்த விமான விபத்துக்கான காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
13-செப்-202104:08:41 IST Report Abuse
anbu நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே விமான விபத்து ஏற்பட காரணம். தொழில் நுட்ப கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை புறந்தள்ளி விட முடியாது. விமானத்தை தரையிறக்கிய போது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே இந்த விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம். விமானி விமானத்தை தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஓடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியது, இந்த விமான விபத்துக்கான காரணமாகவும் இருக்கலாம். இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம், காரணமாக இருக்கலாம், அதையும் புறந்தள்ளி விட முடியாது, இதையும் புறந்தள்ளி விட முடியாது, என்கிற தெளிவற்ற கூற்றுகளை வைத்து விமானி மீது பழி போட முடியாது. இப்படியான அனுமானங்கள் அரசியல் ஆய்வுகள் போன்றவற்றுக்கு பொருந்தும். ஒருவரை குற்றவாளி என நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் அல்ல.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-செப்-202120:07:52 IST Report Abuse
Ramesh Sargam தவறிழைத்த விமானி எங்கே? அவருக்கு தண்டனை கிடைக்குமா?
Rate this:
amalan - thanjavur,டிஜிபௌசி
12-செப்-202122:04:37 IST Report Abuse
amalan"விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 21 பேர் பலியாகினர்". செய்தியை முழுமையாக படிக்கவும்....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-செப்-202123:00:40 IST Report Abuse
Mirthika Sathiamoorthiபைலட் கோ பைலட் ரெண்டுபேரும் விபத்தில போயிசேர்ந்தச்சு..அவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? விமானி எங்கையாம்?...செத்தவன் குடும்பத்துக்கு 10 லட்சம் வழங்க அரசும் விமனநிறுவனமும் உறுதி அளித்தான...ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை...அதுதான் தண்டனை...சந்தோசமா? தொழிநுட்ப கோளாறுக்கு யார்பொறுப்பேத்து தணடனை அடைவாங்கன்னு நினைக்குறீங்க?...
Rate this:
Cancel
12-செப்-202115:38:22 IST Report Abuse
அப்புசாமி நேருதான் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X