சென்னை: நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேதனை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்வு நீக்கப்படும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என தெரிவித்து உள்ளார்.
நீட் தேர்விற்கு பயந்து இன்று சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:
மாணவர் தற்கொலை செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். நீட் தேர்வு கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வில் விலக்கு கேட்டு நாளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மாணவர்கள் விபரீத முடிவு எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்து கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
மத்திய அரசின் பிடிவாதம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வளர வேண்டிய மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாகிறது. நீட் தேர்வு முறைகேடு, ஆள்மாறாட்டம், மாணவர்களின் தற்கொலைகள் மத்திய அரசின் முடிவை மாற்றவில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதன் அவசியம் மேலும் வலுவடைகிறது. நீட் தேர்விற்கு எதிரான நமது சட்ட போராட்டம் துவங்குகிறது. அது நீக்கப்படும் வரை சட்டப்போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE