எதிர்ப்பு குழு தலைவர் அகமது மசூதை தீவிரமாக தேடும் தலிபான்கள்

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை எதிர்த்து பஞ்ச்ஷீர் பகுதியிலிருந்து குரல் கொடுத்து வந்த எதிர்ப்புக்குழுத் தலைவர் அகமது மசூதை தலிபான் பயங்கரவாதிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.பஞ்ச்ஷீர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ச்ஷீரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை
TALIBAN, OPOSITE, LEADER, ESCAPE, தலிபான், தேடுதல், எதிர்ப்புக்குழுதலைவர், தலைமறைவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை எதிர்த்து பஞ்ச்ஷீர் பகுதியிலிருந்து குரல் கொடுத்து வந்த எதிர்ப்புக்குழுத் தலைவர் அகமது மசூதை தலிபான் பயங்கரவாதிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பஞ்ச்ஷீர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ச்ஷீரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அதிலிருந்தே தலிபான்களுக்கு பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் இருந்து எதிர்ப்பு கிளம்பிவிட்டது. ஆனால், பஞ்ச்ஷீரின் 70 சதவீத பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், தலிபான் எதிர்ப்புக் குழு தலைவர் அகமது மசூத் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், மசூத் இன்னமும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார் என்று ஈரான் செய்தி நிறுவனம் ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ஆப்கன் மக்களுக்கு ஆடியோ மூலம் அகமது மசூத் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அதில், ஆப்கன் மக்கள் அனைவரும் சுதந்திரத்துக்காக, தனிநபரின் மாண்புக்காக, நாட்டின் வளத்திற்காக ஒன்றிணைந்து எழுச்சியுடன் போராட வேண்டும் என்று குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக மசூத் அறைகூவல் விடுத்துள்ளார். தலிபான்கள் பஞ்ச்ஷீரில் இருந்து வெளியேறினால் சண்டையை நிறுத்துவதாகவும் கூறியுள்ளார். ஆனால், தலிபான்களோ அகமது மசூதையும், ஆப்கனின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan - VA,இந்தியா
12-செப்-202120:48:12 IST Report Abuse
Nagarajan I pray for well being of அஹ்மத். ஷா Masood
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
12-செப்-202114:55:57 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அவன் கிடைத்தால் அவன் தலை தரையில் உருளும் மூர்க்கர்கள்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
12-செப்-202114:48:57 IST Report Abuse
SUBBU அவரின் அப்பாவை நயவஞ்சகமாக கொன்ற தலிபான்களினால் அவரை என்ன தீவிரமாக தேடினாலும் அவர் கிடைக்க மாட்டார்.தலிபான்கள் தினம் தினம் செத்து செத்துதான் பிழைக்க வேண்டும் என்பது அவர்களின் விதி. விதியை மாற்ற யாரால் முடியும்?அமெரிக்கா விட்டுப் போன நவீன ஆயுதங்களை வைத்து நாம் என்ன வேனாலும் சாதிக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.ஆனால் அந்த ஆயுதங்கள் எதுவும் பலனளிக்க போவதில்லை என்பதை வெகு சீக்கிரம் தலிபான்கள் உணர்ந்து கொள்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X