அரசியல் செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்டப்படி நடக்கும் நீட்: 'உதார் விட்ட உதய்' டுவிட்டரில் டிரெண்டிங்!

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
சென்னை: “தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதனை எப்படி ரத்து செய்வது என்பது எங்களுக்கு தெரியும்?” என சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடர்ந்து பேசி வந்த நிலையில், தி.மு.க., ஆட்சியில் இன்று நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடப்பதால், #உதாருவிட்டஉதய் என்ற ஹாஷ்டேக் மூலம் டுவிட்டரில் உதயநிதியை எதிர்க்கட்சியினர்
உதாரு_விட்ட_உதய், நீட்_ரத்து_எங்கடா,NEET, UdayanithiStalin, உதயநிதி

சென்னை: “தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதனை எப்படி ரத்து செய்வது என்பது எங்களுக்கு தெரியும்?” என சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடர்ந்து பேசி வந்த நிலையில், தி.மு.க., ஆட்சியில் இன்று நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடப்பதால், #உதாருவிட்டஉதய் என்ற ஹாஷ்டேக் மூலம் டுவிட்டரில் உதயநிதியை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர 2013-ல் காங்கிரஸ் ஆட்சியில் மருத்துவ கவுன்சில் மற்றும் சி.பி.எஸ்.இ., இணைந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நீட் தேர்வை அறிவித்தன. அதில் பல்வேறு குழப்பங்கள் இருந்ததால் அத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் உச்ச நீதிமன்ற தடை விலகியதால் 2017-ல் பா.ஜ.க., ஆட்சியில் மீண்டும் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழ், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் இடம்பெற்றன. கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வது சிரமம் என கூறி அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட முதன்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.


405 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீட்!


ஆனாலும் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முடியவில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமலும், நீட் தேர்வு பயத்தினாலும் அனிதா உள்ளிட்ட பல்வேறு தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால் இத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பின்னர் கடந்த 2020-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினார். அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார நிலையில் நலிவடைந்த சுமார் 405 மாணவர்களுக்கு மருத்து சீட் கிடைத்தது.


latest tamil news



இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., தலைவர்கள் நீட் தேர்வை முக்கிய பிரச்னையாக முன் வைத்தனர். 'ஸ்டாலின் தான் வராரு' என்ற பிரசார பாடலில் கூட நீட்டால் உயிரிழந்த அனிதாவின் படம் மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான வரிகள் இடம்பெற்றிருந்தன. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும் நீட் தேர்வுக்காக பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்தார்.


எங்களுக்கு ரத்து செய்ய தெரியும்!


“நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் இதுவரை 14 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு தி.மு.க., ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும், தலைவருக்குத் தெரியும். அந்த ஆளுமை திறன் தி.மு.க., தலைவருக்குத் தான் இருக்கிறது," என பேசினார் உதயநிதி.


ஆர்வமுள்ள மாணவர்களும் பாதிப்பு!


அவரது பேச்சே இன்றைக்கு அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் இன்று தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தி.மு.க.,வால் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை என அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.,வினர் விமர்சிக்கின்றனர். “ஆட்சிக்கு வர தி.மு.க., சொன்ன பொய்யான வாக்குறுதி என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்” என ஒருவர் கூறியுள்ளார். ”பொய்யான வாக்குறுதிகளால் நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்,” என மற்றொருவர் கூறியுள்ளார். “தி.மு.க.,வை நம்பாதே” என மற்றொருவர் மீம் போட்டுள்ளார். இந்திய டிரெண்டிங்கில் இந்த ஹாஷ்டேக் 19-வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - nandhivaram,இந்தியா
17-செப்-202107:07:25 IST Report Abuse
kumar உச்ச நீதிமன்றத்தாலேயே தடை விதிக்க முடியாது, விலக்கு அளிக்க இயலாது என தீர்ப்பளிக்கப்பட்ட நீட் தேர்வு உன்னாலயும் உன் அப்பனாலேயும் ஒன்னும் முடியாது. இவனுக்கெல்லாம் ஓட்டு போட்ட முட்டாள் ஜனங்களே நல்லா அனுபவீங்க
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-செப்-202122:49:26 IST Report Abuse
DARMHAR அப்பன் முதல்வராக இருப்பதால் சின்னப்பையன் தான் தோன்றித்தமாகபேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளுக்க கூடாது
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-செப்-202122:49:25 IST Report Abuse
DARMHAR அப்பன் முதல்வராக இருப்பதால் சின்னப்பையன் தான் தோன்றித்தமாக பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளுக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X