அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 12, 2021
Share
அறிவியல் ஆயிரம்யாரிடம் சுயநலம் அதிகம்சகோதர, சகோதரி உள்ள குழந்தையை விட வீட்டில் ஒரே ஒரு குழந்தையாக இருப்பவரிடம் சுயநல எண்ணம் மிக குறைவாக உள்ளது என சீனாவின் ஷாங்ஷி நார்மல் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்தவர்களுடன் வளரும் குழந்தைகளையும், தனியாக வளரும் குழந்தையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டனர். இதில் தனியாக வளரும் குழந்தையிடம் சுயநல எண்ணம் குறைவாக

அறிவியல் ஆயிரம்

யாரிடம் சுயநலம் அதிகம்


சகோதர, சகோதரி உள்ள குழந்தையை விட வீட்டில் ஒரே ஒரு குழந்தையாக இருப்பவரிடம் சுயநல எண்ணம் மிக குறைவாக உள்ளது என சீனாவின் ஷாங்ஷி நார்மல் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்தவர்களுடன் வளரும் குழந்தைகளையும்,
தனியாக வளரும் குழந்தையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டனர். இதில் தனியாக வளரும் குழந்தையிடம் சுயநல எண்ணம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வுக்கு முன் ஒரே ஒரு குழந்தையாகஇருப்பவர் தான் அதிக சுயநல எண்ணம் கொண்டதாக இருக்கும் என 70 சதவீதம் பேர் மதிப்பிட்டிருந்தனர்.

தகவல் சுரங்கம்

நன்கொடை சிலை


அமெரிக்காவின் நியூயார்க் லிபெர்டி தீவில் சுதந்திர தேவி சிலை உள்ளது. காப்பரால் செய்யப்பட்டது. இதை பிரான்ஸ் நன்கொடையாக அமெரிக்காவுக்கு வழங்கியது. அப்போதைய அமெரிக்க அதிபர் குரோவர் கிளிவ்லண்ட், 1886 அக்., 28ல் இச்சிலையை நிறுவினார். சிலை உயரம் 151 அடி. பீடத்துடன் சேர்த்து 305 அடி. சிலையின் எடை 204 டன். சிலையின் கீழிருந்து தலையில் உள்ள கிரீடம் வரை ஏறிச்செல்ல படிகள் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப படிகளில் ஏறுவதற்கு பார்வையாளருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது 1984ல் யுெனஸ்கோ கலாசார பண்பாட்டு சின்னம் பட்டியலில் இடம் பெற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X