'ஜாமின்' எப்போது வழங்கலாம்?

Added : செப் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'ஒரு வழக்கில் குற்ற வாளியின் 'ஜாமின்' மனுவை விசாரிக்கும் போது, அவரது பின்னணியையும் கவனிக்க வேண்டும். வெளியே சென்றால் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட
 'ஜாமின்' ,எப்போது ,வழங்கலாம்?

புதுடில்லி:'ஒரு வழக்கில் குற்ற வாளியின் 'ஜாமின்' மனுவை விசாரிக்கும் போது, அவரது பின்னணியையும் கவனிக்க வேண்டும். வெளியே சென்றால் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு உத்தரவிட்டதாவது:

ஜாமின் மனுக்கள் மீது விசாரணை நடத்தும் போது, பல முக்கியமான விஷயங்களை நீதிமன்றங்கள் கவனிக்க வேண்டும்.என்னென்ன குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சம் எவ்வளவு தண்டனை கிடைக்கும்; வழக்கில் எந்த விதமான ஆதாரங்கள், சாட்சிகள்உள்ளன என, பலவற்றையும் கவனிக்க வேண்டும்.குறிப்பாக, ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை, ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதேபோல், ஜாமின் மனு கேட்பவரின் பின்னணியையும் அறிய வேண்டும்.

ஜாமினில் விடுவித்தால், அவர் மற்றொரு குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.இந்த வழக்கில் ஜாமின் கேட்டுள்ளவர், சிறையில் இருந்த போதே வெளியில் உள்ளவர்களுடன் இணைந்து சதி திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார். ஜாமின் வழங்கினால் நிச்சயம் மற்றொரு குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால், ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
13-செப்-202118:26:11 IST Report Abuse
K. V. Ramani Rockfort மாநில உயர்நீதிமன்றங்கள் தங்கள் நோக்கத்துக்கு ஜாமீன் வழங்குவதை இந்த உதாரண தீர்ப்பு மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-செப்-202109:35:48 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீனில் இவைகள் கவனிக்கப்பட்டனவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X