ஊழியர் பணியிட மாற்றம் குறித்து உச்ச நீதிமன்றம்...அதிரடி!;உயர் அதிகாரி விருப்பத்துக்கே முன்னுரிமை என கருத்து

Updated : செப் 14, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:'தங்களுக்கு தேவைப்படும் இடத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் ஊழியர்கள் கேட்க முடியாது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விருப்பத்துக்கே இதில் முன்னுரிமை அளிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்ட கல்லுாரியில் பணியாற்றும் உளவியல் துறை பெண் விரிவுரையாளர் நம்ரதா வர்மா.இவர் கவுதம் புத்தா நகர்
 ஊழியர் பணியிட மாற்றம் குறித்து உச்ச நீதிமன்றம்...அதிரடி!;உயர் அதிகாரி விருப்பத்துக்கே முன்னுரிமை என கருத்து

புதுடில்லி:'தங்களுக்கு தேவைப்படும் இடத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் ஊழியர்கள் கேட்க முடியாது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விருப்பத்துக்கே இதில் முன்னுரிமை அளிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்ட கல்லுாரியில் பணியாற்றும் உளவியல் துறை பெண் விரிவுரையாளர் நம்ரதா வர்மா.இவர் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிக்கு இடமாறுதல் கோரினார்.


உரிமை உள்ளது



இவரது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்ததை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 2017ல் மனு தாக்கல் செய்தார். அதில் 'அம்ரோஹா மாவட்ட கல்லுாரியில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ள நிலையில், அரசு விதிகளின்படி விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கோர எனக்கு உரிமை உள்ளது' என கூறி இருந்தார்.

அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மனுதாரர் 2000ம் ஆண்டில் கவுதம் புத்தா நகர் மாவட்ட கல்லுாரியில் உளவியல் துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு 13 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 'அம்ரோஹா மாவட்ட கல்லுாரியில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றும் அவர், குறிப்பிட்ட ஆண்டுகள் பணி நிறைவு செய்த பின் வேறு கல்லுாரிக்கு மாறுதல் கோரலாம்.


வலியுறுத்த முடியாது

'ஆனால் ஏற்கனவே 13 ஆண்டுகள் பணியாற்றிய கல்லுாரிக்குத் தான் மாற்றம் செய்ய வேண்டும் என கேட்க முடியாது' என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, நம்ரதா வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.ஆர்.ஷா, அனிருத்த போஸ் ஆகியோரின் 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஊழியர் ஒருவர் தன்னை குறிப்பிட்ட இடத்திற்கு மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்த முடியாது. பணி வழங்கும் பொறுப்பில் இருப்பவர், தேவையை கருத்தில் வைத்து இடமாறுதல் உத்தரவுகளை பிறப்பிக்கிறார். எனவே, பொதுவாக மற்றும் விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என, பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raguram - madurai,இந்தியா
13-செப்-202119:46:31 IST Report Abuse
raguram அப்போ சாதரண ஊழியர்கே விருப்பட்ட இடத்தில் சேவை செய்ய அனுமதி இல்லாபோது, மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லும் வாக்கு வங்கி பலத்தில் விரும்பும் தொகுதி கேட்கும் அரசியல்வாதிகளுக்கு குலுக்கல் முறையில் தொகுதிகள் ஓதுக்க நீதிமன்றம் ஆணையிட்டால் ஊழல் பெறுமளவு குறையுமே.
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
13-செப்-202117:17:22 IST Report Abuse
Dinesh Pandian இந்த அதிகாரம் கூட இல்லைனா என்ன உயர் அதிகாரி . இவர்கள் கேட்கும் எல்லா சலுகையும் கிடைக்க அங்க என்ன முதல்வர் ஸ்டாலின் இருக்காரா என்ன.
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
13-செப்-202117:16:00 IST Report Abuse
Dinesh Pandian indha
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X