பொது செய்தி

இந்தியா

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு 'பூஸ்டர் டோஸ்' செலுத்த அரசு திட்டம்?

Updated : செப் 14, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களை செலுத்தியும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களுக்கு, 'பூஸ்டர்' டோஸை செலுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.23 சதவீதம் பேர்நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி 18
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு 'பூஸ்டர் டோஸ்' செலுத்த அரசு திட்டம்?

புதுடில்லி:கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களை செலுத்தியும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களுக்கு, 'பூஸ்டர்' டோஸை செலுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


23 சதவீதம் பேர்

நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ்களாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இதற்கிடையே ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைப்பதற்காக, பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டமும் அரசின் ஆய்வில் உள்ளது.

ஒடிசாவின் புவனேஷ்வரில், 'இன்ஸ்டிடியூட் ஆப் லைப் சைன்சஸ்' என்ற ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி உள்ள அந்நிறுவன ஊழியர்களில் 23 சதவீதம் பேருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இரண்டு டோஸ்களை செலுத்தியும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவோருக்கு மட்டும் பூஸ்டர் டோஸை செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அனுமதி

இது குறித்து, இந்த நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அஜய் பரிதா கூறியதாவது:கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியுள்ளவர்களுக்கு நான்கு முதல், ஆறு மாதங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு குறைந்துபோக வாய்ப்பு உள்ளது. அப்படி குறைந்து போகும் மக்களுக்கு மட்டும் பூஸ்டர் டோஸை செலுத்த வேண்டியது கட்டாயமாகிவிடும். இவர்களுக்கு பூஸ்டர் டோஸை செலுத்துவதற்கு, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


2 'டோஸ்' கட்டாயம்

ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கொரோனா வைரசில் இருந்து மீண்டோருக்கு, 'கோவாக்சின்' தடுப்பூசி செலுத்தப்பட்டால், அவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுவும் கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு 'டோஸ்' செலுத்தினாலே, அது அவர்களுக்கு போதுமானதாக கருதப்படுகிறது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்படாத மக்கள், கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202109:12:33 IST Report Abuse
Kasimani Baskaran இங்கு கூட நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளோருக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X