அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஏழைகளுக்கு 5 ஏக்கர் நிலம்'

Updated : செப் 13, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் நிலமில்லாத ஏழைகளுக்கு, இலவசமாக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று சென்னை வந்திருந்தார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியே ஆட்சி அமைக்கும்.
'ஏழைகளுக்கு  5 ஏக்கர் நிலம்'

சென்னை:''தமிழகத்தில் நிலமில்லாத ஏழைகளுக்கு, இலவசமாக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறினார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று சென்னை வந்திருந்தார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியே ஆட்சி அமைக்கும். தமிழகத்தில், ஆதி திராவிட மக்களுக்குரிய பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

நிலமில்லாத ஏழைகளுக்கு தலா, ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். உயர் வகுப்புக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றவர்களை பாதிக்காது.மத்திய அரசின், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில், ஆறு ஆண்டுகளில் 9,600 கோடி ரூபாய் மானியம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முத்ரா திட்டத்தில் 3.70 கோடி பேருக்கு 1.63 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தில், 1.13 கோடி பேருக்கு, தமிழகத்தில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202122:47:19 IST Report Abuse
Pugazh V பாலக்கோடு சுள்ளான் - போலிப்பெயரில் உலவும் ஆர்எஸ்எஸ் என்று தெரிந்து விட்டது. இந்தி தெரியாத எவனோ அல்ல. ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி தான் இதை இங்கிலீஷில் மொழிபெயர்த்து சொன்னான். ரி. டிவி யின் யூ ட்யூபில் இப்போதும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வீடியோவை பார்க்க லாம். 15 லட்சம் என்று பீலா தான் வுட்டோம் . இந்தியில் ஜூம்லா என்று இதே ரிபப்ளிக் டிவியில் அமித்ஷா சொல்லிச் சிரித்தார். H today TV யில் நிதின்கட்கரி, எலக்ஷன் டைம் பீலா அது. அதை நினைவு படுத்தி யாராவது கேட்டால் தனக்கு சிரிப்பு வருகிறது சொல்லிச் சிரித்தார்.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
13-செப்-202120:52:37 IST Report Abuse
S Bala ஏதாவது தெரிந்துதான் பேசுகிறாரா இல்லை கொஞ்சம் அதிகமாக அருந்திவிட்டாரா
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202120:44:13 IST Report Abuse
Pugazh V ஹா ஹா ஹா. இலவசங்களை எதிர்க்கும் பாஜக வாசகர்கள் எங்கிருந்தாலும் இப்போது மேடைக்கு வரவும். இந்த இலவஞம் ஓ. கே.யா? இது நடைமுறை சாத்தியமா? எழுதுங்கள்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X