ஏழைகளுக்கு 5 ஏக்கர் நிலம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஏழைகளுக்கு 5 ஏக்கர் நிலம்'

Updated : செப் 13, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (14)
Share
சென்னை:''தமிழகத்தில் நிலமில்லாத ஏழைகளுக்கு, இலவசமாக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று சென்னை வந்திருந்தார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியே ஆட்சி அமைக்கும்.
'ஏழைகளுக்கு  5 ஏக்கர் நிலம்'

சென்னை:''தமிழகத்தில் நிலமில்லாத ஏழைகளுக்கு, இலவசமாக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறினார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று சென்னை வந்திருந்தார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியே ஆட்சி அமைக்கும். தமிழகத்தில், ஆதி திராவிட மக்களுக்குரிய பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

நிலமில்லாத ஏழைகளுக்கு தலா, ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். உயர் வகுப்புக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றவர்களை பாதிக்காது.மத்திய அரசின், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில், ஆறு ஆண்டுகளில் 9,600 கோடி ரூபாய் மானியம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முத்ரா திட்டத்தில் 3.70 கோடி பேருக்கு 1.63 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தில், 1.13 கோடி பேருக்கு, தமிழகத்தில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X