அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாரதியின் சமதர்ம சிந்தனை எக்காலத்திற்கும் தேவை: முதல்வர்

Updated : செப் 13, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:''சமதர்ம சிந்தனையுள்ள பாரதியார், எக்காலத்திற்கும் தேவைப்படுகிறார்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், பாரதியின் நுாற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், முதல்வர் ஸ்டாலின் பாரதிச் சுடரை ஏற்றி, வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவியிடம்
பாரதியின் சமதர்ம சிந்தனை எக்காலத்திற்கும் தேவை: முதல்வர்

சென்னை:''சமதர்ம சிந்தனையுள்ள பாரதியார், எக்காலத்திற்கும் தேவைப்படுகிறார்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், பாரதியின் நுாற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், முதல்வர் ஸ்டாலின் பாரதிச் சுடரை ஏற்றி, வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவியிடம் வழங்கினார்.


ரூ.1லட்சம் பரிசு

பின், முதல்வர் பேசியதாவது:வானவில்லின் வண்ணங்கள் வேண்டுமானால் ஏழாக இருக்கலாம். ஆனால், பாரதியின் எண்ணங்களும் வண்ணங்களும் சுதந்திரமானவை; எண்ணற்றவை. அவர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு மட்டுமின்றி, குடும்பம், ஜாதி, மதம், அரசின் அடக்குமுறைகளுக்கும் எதிரானவர். பாரதியார் மறைந்தாலும், அவர் பாடல்களும் சிந்தனைகளும் மறையாது. அவர் பாடல்கள் அழிந்தாலும், மக்கள் மனதில் இருந்து அவற்றை மீட்கலாம். அவ்வளவு வலிமை படைத்தவர் அவர்.

அவரின், 'அச்சம் தவிர்; உடலினை உறுதி செய்; ஏறுபோல் நட; கொடுமையை எதிர்த்து நில்; சூரரைப் போற்று; சோதிடம் இகழ்; போர்த் தொழில் பழகு' என்னும், புதிய ஆத்திச்சூடியின் பொருள், என்றைக்கும் தேவையாக உள்ளது.பாரதியின் பெருமைகளை அறிந்த அண்ணாதுரை, அவரை, 'மக்கள் கவிஞர்' என்று அழைத்தார்.


வரலாற்று சின்னம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாரதியார் வாழ்ந்த, துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வீட்டை விலைக்கு வாங்கி வரலாற்றுச் சின்னமாக்கினார்.இந்த அரசு, பாரதியின் நினைவு நாளை, மகாகவி நாளாக அறிவித்தது. அவரின் நினைவை பாடும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ௧ லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது. பாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களை தொகுத்து, 'மனதில் உறுதி வேண்டும்' என்ற தலைப்பில், 37 லட்சம் மாணவர்களுக்கு நுாலாக வழங்கப்பட உள்ளது.

பாரதியை பற்றி ஆய்வு செய்த சீனி விஸ்வநாதன், ய.மணிகண்டன் ஆகியோருக்கு நிதி வழங்கப் பட உள்ளது. பூம்புகார் கலைக்கூடத்தின் வாயிலாக, பாரதியின் உருவச் சிலைகள் வடிக்கப்பட உள்ளன. பாரதியின் கையெழுத்துப் பிரதிகளை தொகுத்து, செம்பதிப்பாக வெளிடப்படும். வாரந் தோறும் நிகழ்ச்சி அவர் எழுதிய ஆங்கில கட்டுரைகள் தொகுக்கப்படும். புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன், பாரதியின் கட்டுரைகள், மாணவர்களுக்கான நுால்களாக தொகுக்கப்படும்.சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மதுரையில் அமைய உள்ள கருணாநிதி நுாலகம் ஆகியவற்றில், பாரதியின் தனிப் பிரதிகள் வைக்கப்படும்.

திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள் தொகுக்கப்படும். சென்னை பாரதியார் இல்லத்தில், வாரம்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாரதியின் பெயர் சூட்டப்படும். அன்பு, அறிவு, கல்வி, நீதியை கடைப்பிடிப்போரை மட்டுமே மேலோர் என்கிறார் பாரதி. அதை ஏற்று அரசு செயல்படும். சமதர்மச் சிந்தனையுள்ள, 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என சுற்றுச்சூழலை போற்றும் திறமுள்ள பாரதி, எக்காலத்துக்கும் தேவைப்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


சமூக சீர்திருத்தம்

நிகழ்ச்சியில், மத்திய கலாசாரத் துறை மற்றும் பார்லிமென்ட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் பேசியதாவது:'பாரதியின் நாமம் வாழ்க' என்று கூறும் போதே, உடலில் சக்தி பிறக்கிறது. பாரதியார், கலாசாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் பாடுபட்டார். புதுச்சேரியில் உள்ள பாரதியார் இல்லத்தில் இருந்த, ஆங்கில கட்டுரைகளை படித்தபோது, பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட அவரின் பல்துறை திறமைகளை அறிந்து வியந்தேன்.

சகோதரி நிவேதிதையின் அறிவுரையை ஏற்று, மனைவிக்கும் சம உரிமை அளித்ததோடு, பெண்களின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டவர். அவரின் எழுத்துக்கள் நாட்டு மக்களுக்கானது. ராம் மோகன்ராய் அமைப்பின் சார்பில், அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து, அனைத்து மாநில நுாலகங்களுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், வானவில் பண்பாட்டு மையத் தலைவர் வ.வே.சு., அமைப்பாளர் ஷோபனா ரமேஷ், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன், எழுத்தாளர் சிவசங்கரி, பேச்சாளர் பர்வீன் சுல்தானா, உலகநாயகி பழநி, பாடகி அனுராதா ஸ்ரீராம், இசையமைப்பாளர் அருண் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-செப்-202122:15:22 IST Report Abuse
sankaseshan தர்மம் என்னவென்று தெரி யாதவர் தர்மத்தை பற்றி பேசுகிறார் கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சலுகை வாழ்த்து ஹிந்துக்களுக்கு கோவிலில் வழிபட தடை
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
13-செப்-202117:38:44 IST Report Abuse
DVRR பாரதியின் சமதர்ம சிந்தனை? இந்தியா எனது தேசம் என்று நினைத்தார்? டாஸ்மாக்கினாடு தான் எனது தேசம் என்று நினைத்தாரா? இல்லையல்லவா? இது சமதர்ம சிந்தனை என்றால்? திராவிட விடியல் மட்டும் ஏன்? இந்திய விடியல் வேண்டாமா? மூர்க்க கிறித்துவ விடியல் மட்டும் ஏன் இந்து விடியல் வேண்டாமா? சொல் சம சிந்தனை உள்ள விடியல் அரசே?
Rate this:
Cancel
A.Muralidaran - Chennai,இந்தியா
13-செப்-202115:09:52 IST Report Abuse
A.Muralidaran ஜாதிகள் இல்லையடி பாப்பா அதனால் ஜாதிய ஒதுக்கீடும் இல்லையடி பாப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X