பொது செய்தி

தமிழ்நாடு

'பாரதியார் பாடல்களால் வளரும் நாட்டுப்பற்று': எட்டயபுரத்தில் நிர்மலா சீதாராமன் புகழாரம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (2+ 17)
Share
Advertisement
எட்டயபுரம்:''மகாகாவி பாரதியார் பாடல்களை பாடினாலே நாட்டுப்பற்று வளர்வதால்,பள்ளி மாணவர்களுக்கு அவற்றை கற்றுத்தர வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.நமக்குள் சக்தி பிறக்கும்துாத்துக்குடி மாவட்டம்,எட்டயபுரத்தில் நடந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நுாற்றுாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:பாரதி பாடல்களை
 'பாரதியார் பாடல்களால் வளரும் நாட்டுப்பற்று': எட்டயபுரத்தில்  நிர்மலா சீதாராமன் புகழாரம்

எட்டயபுரம்:''மகாகாவி பாரதியார் பாடல்களை பாடினாலே நாட்டுப்பற்று வளர்வதால்,பள்ளி மாணவர்களுக்கு அவற்றை கற்றுத்தர வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.


நமக்குள் சக்தி பிறக்கும்

துாத்துக்குடி மாவட்டம்,எட்டயபுரத்தில் நடந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நுாற்றுாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:பாரதி பாடல்களை கேட்டாலே நமக்குள் சக்தி பிறக்கும். பாடல்களால் நாட்டில் உணர்ச்சி வேட்கை ஊட்டி, பெண்களுக்காகவே தனி நாளிதழ் நடத்தியவர். பெண்களுக்கு சமத்துவம்வேண்டும் என தன் மனைவி செல்லமாள் தோள் மீது கை போட்டு அழைத்து சென்றவர்.

கடந்த 1921க்கு முன்பே, 'ஆடுவோமேபள்ளுப் பாடுவோமே', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா' என பாடி சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே அவர் தைரியத்தை வெளிப்படுத்தினார்.பிரதமர் மோடி, பாரதி பெருமையை போற்றும் விதமாக, காசி விஷ்வ வித்யாலயாவில் தமிழ் இருக்கை, வாரணாசி பல்கலையில் ஒரு மையம் அமைத்துள்ளார்.
பாரதியார் பாடல்களை பாடினாலே நாட்டுப்பற்று வளரும் என்பதால், பள்ளி மாணவர்களுக்கு அவற்றை கற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை நுால், வாழிய பாரத மணி திருநாடு மின் நுால்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.


வங்கி நுாற்றாண்டு விழா

துாத்துக்குடியில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நுாற்றாண்டு விழா நடந்தது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த 2014ல் வாராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளை வங்கிகள் சந்தித்தன. மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது, வங்கிகளுக்கு தாராள நிதி வழங்கி, கடன் வசூலிக்க உதவியது. மத்திய அரசு நடவடிக்கையால் வங்கி துறை நல்ல நிலையில் உள்ளது.

வங்கி துறையில் டிஜிட்டல் மயம் முக்கியம். கிராமங்களில் வங்கி கிளை இல்லை என்றாலும் வங்கி சேவை அளிக்கலாம். டிஜிட்டல் பரிவர்த்தனை வங்கி, மக்களுக்கு பயனளிக்கிறது. கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கும் வங்கி சேவைகள் கிடைக்க, பிரதமர் மோடி, 'ஜன்தன் யோஜனா' திட்டம் கொண்டு வந்தார்.

நாட்டில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில் 73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டு உள்ளது.மூன்றாம் அலை வந்தாலும், ஆக்சிஜன் உள்ளிட்ட வசதியை வங்கிகள் மூலம் பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2+ 17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
13-செப்-202108:55:56 IST Report Abuse
venkatan நாம் ராஜாஜியைக்கூட மறந்துவிட்ட்டோம்.அவர் ஓபன் கேட்டகிரியில் வருவதால்...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202116:55:04 IST Report Abuse
Kasimani Baskaranஅவர் திராவிடர்களுடன் சேர்ந்து காமராஜரை ஒழித்துக்கட்ட வழி செய்தவர். பல குழப்பங்களுக்கு காரணமானவர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X