சத்துணவு ஊழியர் மாநாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு ஊழியர் மாநாடு

Added : செப் 12, 2021
Share
திருப்பூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாநாடு நடந்தது. மாவட்ட துணை தலைவர் கற்பகம் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் தனலட்சுமி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் நாகராஜன் வரவேற்றார். மாநில செயலாளர் சக்தி, மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.சத்துணவு ஊழியருக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வு பெறும்

திருப்பூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாநாடு நடந்தது. மாவட்ட துணை தலைவர் கற்பகம் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் தனலட்சுமி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் நாகராஜன் வரவேற்றார். மாநில செயலாளர் சக்தி, மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.சத்துணவு ஊழியருக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியருக்கு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிமாக, 9,000 ரூபாய் வழங்குதல், ஓய்வு பெறுவோருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் பணப்பலன் அளித்தல், உணவு மானிய தொகையை, மாணவருக்கு ஐந்து ரூபாய் வீதம் உயர்த்தி வழங்குதல், தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலைவராக பாக்கியம், செயலாளராக நாகராஜன், பொருளாளராக மகேந்திரபூபதிஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X