பொது செய்தி

தமிழ்நாடு

'மரம் தரும் உணர்வு, இனிமை'

Added : செப் 12, 2021
Share
Advertisement
தமிழ்நாடு அறிவியல் இயக்க, திருப்பூர் மாவட்ட ஆறாவது மாநாடு,கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். இணை செயலாளர் கார்த்திக் வரவேற்றார். ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் மணி, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி பேராசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.சூழலியலாளர் கோவை சதாசிவம் பேசுகையில், ''பிளாஸ்டிக்
 'மரம்  தரும் உணர்வு, இனிமை'

தமிழ்நாடு அறிவியல் இயக்க, திருப்பூர் மாவட்ட ஆறாவது மாநாடு,கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். இணை செயலாளர் கார்த்திக் வரவேற்றார். ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் மணி, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி பேராசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.சூழலியலாளர் கோவை சதாசிவம் பேசுகையில், ''பிளாஸ்டிக் எனும் கொடிய அரக்கனால், சுற்றுச்சூழல் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீமை செய்வது குற்றம்தான்.நம்மால் முடிந்தால் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். இல்லையேல் மரம் நடுவோருக்கு உதவ வேண்டும். நம் கண்முன்னே வளர்ந்து செழித்து ஒரு மரம் தரும் உணர்வு அவ்வளவு இனிமையானது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரமாவது நட வேண்டும்'' என்றார். ஆசிரியர் தினம் மற்றும் எழுத்தறிவு தின போட்டிகளில் பங்குபெற்ற மாணவருக்கு, மாநில செயலாளர் நாராயணசாமி, முகமதுபாதுஷா ஆகியோர் பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X