பொது செய்தி

தமிழ்நாடு

கரைப்புதுார் சிறக்க...

Added : செப் 12, 2021
Share
Advertisement
பல்லடம் ஒன்றியத்தில் உள்ள, 20 கிராம ஊராட்சிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டதாக கரைப்புதுார் ஊராட்சி உள்ளது. இதில், 39 குக்கிராமங்கள் உள்ளன. வடமாநில தொழிலாளர்கள் பலர் இங்கு குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்கு அடிப்படைத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. துர்நாற்றம் வீசும் குப்பை குவியல்கள், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் சாக்கடைகள்,
 கரைப்புதுார் சிறக்க...

பல்லடம் ஒன்றியத்தில் உள்ள, 20 கிராம ஊராட்சிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டதாக கரைப்புதுார் ஊராட்சி உள்ளது. இதில், 39 குக்கிராமங்கள் உள்ளன. வடமாநில தொழிலாளர்கள் பலர் இங்கு குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்கு அடிப்படைத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. துர்நாற்றம் வீசும் குப்பை குவியல்கள், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் சாக்கடைகள், இருளில் மூழ்கும் கிராமங்கள் என, அடிப்படை பிரச்னைகள் இங்கு ஏராளம். குறைவான துப்புரவு பணியாளர்கள், உபகரணங்கள், நிதி பற்றாக்குறையால், அடிப்படை பிரச்னைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ளது.கரைப்புதுார் ஊராட்சியை, அருகிலுள்ள கணபதிபாளையம் ஊராட்சியின் சில பகுதிகளை இணைத்து, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், கூடுதல் நிதி, பணியாளர்கள் கிடைப்பதுடன், அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X