பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பேட்டி

Added : செப் 12, 2021
Share
Advertisement
பல்லடம்:'நீட்' தேர்வு எழுதிய, திருப்பூர் மாவட்ட, மாணவ, மாணவியர் சிலர், 'நீட்' தேர்வு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.முரளி கிருஷ்ணன், உடுமலை:'நீட்'தேர்வால் மருத்துவரின் மதிப்பு புரியும். தமிழகத்தில் 'சீட்'களை அதிகப்படுத்துவதுடன், அரசே 'நீட்' பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதால் மாணவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.பூமிகா, ஊத்துக்குளி:அரசு
 'நீட்' தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பேட்டி

பல்லடம்:'நீட்' தேர்வு எழுதிய, திருப்பூர் மாவட்ட, மாணவ, மாணவியர் சிலர், 'நீட்' தேர்வு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.முரளி கிருஷ்ணன், உடுமலை:

'நீட்'தேர்வால் மருத்துவரின் மதிப்பு புரியும். தமிழகத்தில் 'சீட்'களை அதிகப்படுத்துவதுடன், அரசே 'நீட்' பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதால் மாணவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.பூமிகா, ஊத்துக்குளி:

அரசு ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ கனவு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் மட்டுமே எங்களை போன்ற அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுத வருகின்றனர். வசதி இல்லாததால், 'நீட்' தேர்வுக்காக நான் எங்கும் பயிற்சி பெறவில்லை. தமிழக கல்லுாரிகளில் உள்ள மருத்துவ கல்வி இடத்தை இதர மாநிலத்தினர் பயன்படுத்தி கொள்கின்றனர். இது மாற வேண்டும்.சுதிக் ஷா, திருப்பூர்:

'நீட்' கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 'நீட்' தேர்வில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் இருந்தே பெரும்பாலும் கேட்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.ஜெயப்பிரசாத் ராமசாமி, நம்பியூர்:

'நீட்' நடத்துவதால், தகுதியானவர்கள் மட்டுமே மருத்துவராவர்; அரசு ஒதுக்கீடு மூலம் பயன்பெற பலர் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வரும் நாட்களில் 'சீட்'களை அதிகப்படுத்துவதால் ஏழை மாணவர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.அபிநயா, அவிநாசி:

வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. 'நீட்' கஷ்டம் இல்லை. முடியும் என நினைத்தால் சாதிக்கலாம்; வெற்றி நம் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் நல்ல பயிற்சி கிடைத்தால் சாதிப்பது எளிதாகும். மருத்துவராக பலருக்கும் ஆசை உள்ளது. தமிழகத்தில் குறைவான மாணவர்களே வருகின்றனர். 'நீட்' குறித்து பயம் தேவையில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X