அவிநாசி ரோட்டில் அபாய குழி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி ரோட்டில் அபாய குழி

Added : செப் 12, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோடு, காந்திநகர் சிக்னல் பகுதியில், ரோட்டோரத்தில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.அப்பகுதியில் குழி தோண்டப்பட்டு, உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால், தோண்டிய குழியை மூடாமல் விட்டுவிட்டனர். அதே இடத்தில், குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 15 நாட்களாக குடிநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.இரண்டு அடிக்கு மேல் ஆழமுள்ள குழியில்,
 அவிநாசி ரோட்டில் அபாய குழி

திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோடு, காந்திநகர் சிக்னல் பகுதியில், ரோட்டோரத்தில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.அப்பகுதியில் குழி தோண்டப்பட்டு, உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால், தோண்டிய குழியை மூடாமல் விட்டுவிட்டனர். அதே இடத்தில், குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 15 நாட்களாக குடிநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.இரண்டு அடிக்கு மேல் ஆழமுள்ள குழியில், தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது; தண்ணீர் வினியோகிக்கும்போது, ரோட்டில் வழிந்தோடி, வீணாகிறது. போக்குவரத்து மிகுந்த அவிநாசி ரோட்டில், தண்ணீர் தேங்கியுள்ள குழியால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.ரோட்டோரத்தை பயன்படுத்த முடியவில்லை; இரவு நேரங்களில், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், தடுமாறி குழிக்குள் விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மாநகராட்சி நிர்வாகம், குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, குழியை மூடவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X