பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் தேக்கம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
பல்லடம்:விநாயகர் சதுர்த்திக்கு, அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தன.கடந்த 10ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது.பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிலை
 விநாயகர் சிலைகள் தேக்கம்

பல்லடம்:விநாயகர் சதுர்த்திக்கு, அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தன.கடந்த 10ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது.பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிலை தயாரிப்பாளர் பாலாஜி கூறுகையில், ''தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வழக்கமாக வரும் சிலை ஆர்டர்கள் குறைந்தன. இந்தாண்டு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து, முன்பே சிலை தயாரிக்கும் பணி துவங்கியது.வழக்கமாக, உயரமான சிலைகளே அதிகம் புக்கிங் செய்யப்படும். அரசுக் கட்டுப்பாடுகளால், உயரமான சிலைகளை யாரும் வாங்காததால், அவை தேக்கம் அடைந்தன. சிலை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X