திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த 'மெகா' முகாம்களில், இலக்கை விஞ்சி, 1.21 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.திருப்பூர் மாவட்டத்தில், 14 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திய நிலையில், பத்து லட்சத்துக்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனர். இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக மாவட்டத்தில், 493 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தன.தடுப்பூசி செலுத்தும் பணியில், 2,430 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் ஒரு மணி நேரம் முகாமுக்கு குறைந்தளவே கூட்டம் இருந்தது. ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், காலை, 9:00 மணிக்கு பின் ஒவ்வொருவராக வர துவங்கினர். 11:00 மணிக்கு பிறகு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.பஸ் ஏற வந்த பயணிகள், பழைய பஸ் ஸ்டாண்ட் முகாமில் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஞாயிறு வெளிமாநில ரயில் வருகையால், பிளாட்பார்ம் முழுவதும் வட மாநிலத்தவர் காணப்பட்டனர். நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மாத்திரை வழங்கப்பட்டது.இலக்கை தாண்டியதுகலெக்டர் வினீத் கூறுகையில், 'மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 634 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முடிந்த இடத்தில் முன்னதாகவே முகாம் முடிந்தது.தடுப்பூசி இருப்பு இருந்த பகுதியில் தொடர்ந்து, இரவு, 7:00 மணி வரை முகாம் நடந்தது. எவ்வித சலனமுமின்றி மாவட்டம் முழுதும் தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள் ளது. தொடர்ந்து வரும் நாட்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE