தமிழ்நாடு

'நீட்' தேர்வு எழுதிய, 3,854 மாணவ, மாணவிகள் டாக்டர் கனவை, நெஞ்சில் சுமந்து...! அருகிலேயே மையம் அமைந்ததால் மகிழ்ச்சி

Updated : செப் 13, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று எட்டு மையங்களில் நடந்த 'நீட்'தேர்வில், 3,854 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.நாடு முழுவதும்எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நேற்று நடந்தது. தமிழகத்தில், 1.10 லட்சம் பேர் தேர்வெழுதினர். முதல் முறையாக திருப்பூர் தனி மண்டலமாக
'நீட்'  தேர்வு எழுதிய, 3,854 மாணவ, மாணவிகள் டாக்டர் கனவை, நெஞ்சில் சுமந்து...! அருகிலேயே மையம் அமைந்ததால் மகிழ்ச்சி

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று எட்டு மையங்களில் நடந்த 'நீட்'தேர்வில், 3,854 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.நாடு முழுவதும்எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நேற்று நடந்தது. தமிழகத்தில், 1.10 லட்சம் பேர் தேர்வெழுதினர். முதல் முறையாக திருப்பூர் தனி மண்டலமாக பிரிக்கப்பட்டது.

மாவட்டத்தில், மொத்தம், எட்டு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கூலிபாளையம் - வித்யாசாகர் மெட்ரிக் பள்ளி,ஜெயந்தி மெட்ரிக் பள்ளி - சின்னக்கரை, டீ பப்ளிக் பள்ளி - பழங்கரை, லிட்டில் கிங்டம் பள்ளி - சோளிபாளையம், சசூரி இன்ஜி., கல்லுாரி - விஜயமங்கலம்,ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி - பூண்டி, மஹாராணி கலை அறிவியல் கல்லுாரி - தாராபுரம், ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி - உடுமலை ஆகிய, 8 மையங்கள், 3,988 மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இவர்களில், 3,854 பேர் தேர்வெழுதினர்; 134 பேர் பங்கேற்கவில்லை.உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு, காலை, 11:00 மணி முதல் மாணவர்கள் மையத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். அடையாள அட்டை, ஹால் டிக்கெட், பரிசோதனை துவங்கியது. தண்ணீர் பாட்டில், 50 மி.லி., சானிடைசர் பாட்டிலை மட்டுமே தேர்வறைக்குள் எடுத்து சென்றனர்.மதியம், 1:30 மணி வரை தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பின், 2:00 மணிக்கு துவங்கிய தேர்வு, மாலை 5:00 மணி வரை நடந்தது.அதுவரை, பெற்றோர் தங்களுக்கு அமைக்கப்பட்ட காத்திருக்கும் பகுதியில் இருந்தனர்.
வெளிப்புற வளாகத்தில் கூட்டம் சேராதபடி, காவல்துறையினர், போக்குவரத்து போலீசார் பார்த்துக்கொண்டனர்.தனியறையில்தேர்வெழுதிய மாணவிமாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் கே.எம்.சி., பள்ளி முதல்வர் நாகமணி கூறுகையில், ''மாணவர்களுக்கு முன்கூட்டியே அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், 'மைக்' மூலம் அறிவிக்கப்பட்டு, மாணவர்களை உள்ளே அனுமதிக்கப்பட்டதால் நெரிசலுக்கு வாய்ப்பில்லை. சுமூகமாக நடந்து முடிந்தது.
சசூரி கல்லுாரியில் மட்டும், 18 வயது மாணவி ஒருவர் அம்மை நோய் காரணமாக தனியறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டர்,'' என்றார்.314 அரசு பள்ளிமாணவர்கள்அரசு பள்ளி 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், ''பங்கேற்ற அனைத்து மாணவர்களும் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.தேர்வறைக்குள் நுழைந்ததும், 'என்-95' முக கவசம், கையுறை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், அரசு பள்ளிகளில் படிக்கும், 314 மாணவர்கள் தேர்வெழுதினர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
13-செப்-202108:43:59 IST Report Abuse
duruvasar தமிழ் குழைந்தைகள் அமைதியாகவும் உற்சாகமாகவும் தேர்வில் பங்குக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த ஸ்டாலின் அரசுக்கு நன்றி.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
13-செப்-202107:10:31 IST Report Abuse
Duruvesan எல்லோருக்கும் வாழ்த்துக்கள், எம் பிள்ளைகள் சாதிக்க பிறந்தவர்கள், நீட் jee எல்லாம் எம் பிள்ளைகளுக்கு சாதனையின் ஒரு மைல் கல் அவ்வளவே, எல்லாம் வல்ல ஈசன் துணை உண்டு எல்லோருக்கும், விடியல் இப்போது அசிங்க பட்டு போனாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X