அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் , பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் அகற்ற உத்தரவு! ; உடனடி நடவடிக்கை என அமைச்சர் அறிவிப்பு

Updated : செப் 13, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிகள் அருகில், மதுக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற, 'டாஸ்மாக்' அதிகாரிகளுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். ''டாஸ்மாக் கடைகள் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் அவர் அறிவித்துள்ளார்.தமிழக அரசின்,
கோவில் , பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் அகற்ற உத்தரவு! ; உடனடி நடவடிக்கை என அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிகள் அருகில், மதுக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற, 'டாஸ்மாக்' அதிகாரிகளுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். ''டாஸ்மாக் கடைகள் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவன செயல்பாடுகள் குறித்து, சென்னை, எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுப்ரமணியன், மதுவிலக்கு பிரிவு ஏ.டி.ஜி.பி., சந்தீப் ரத்தோர் ராய், முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் பங்கேற்றனர். பின், செந்தில் பாலாஜி கூறியதாவது:

தமிழகத்தில் 5,410 மதுக் கடைகளும், 2,808 பார்களும் உள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, 'பார்'கள் மூடப்பட்டு உள்ளன. இந்த காலக்கட்டத்தில், விஜிலென்ஸ் பிரிவு, மாவட்ட மேலாளர்கள் உள்ளிட்டோர், மதுக் கடைகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 1,072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் 724 பார்கள், 'சீல்' வைக்கப்பட்டு உள்ளன; ஆறு ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.சிலருக்கு மது வகைகளின் விலை தெரிய வாய்ப்பில்லை என்பதால், ஊழியர்கள் சொல்லும் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. ஒரு வாரத்திற்குள் அனைத்து கடைகள் முன்னும், மிக தெளிவாக தெரியக்கூடிய வகையில், மது வகைகளின் விலை பட்டியல் வைக்குமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடைகள் செயல்பட்டால், ஊழியர்கள், மேற்பார்வையாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.எந்த கடையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றாலும், அதற்கு பொறுப்பு மாவட்ட மேலாளர்கள் தான் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


நடவடிக்கை

அவர்கள், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களை சரிவர கண்காணிக்க வேண்டும்.முதுநிலை மண்டல மேலாளராக இருந்தாலும், மாவட்ட மேலாளராக இருந்தாலும், கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். பார்கள் திறந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமுறைகளுக்கு மாறாக, கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் அருகில் இயங்குகிற கடைகளை குறிப்பிட்டு, என்னிடமோ, டாஸ்மாக் மேலாண் இயக்குனரிடமோ கூறினால், நிச்சயம் அந்த இடத்தில் இருந்து மாற்றப்படும். மதுக் கடைகள் தொடர்பாக, பொது மக்களிடம் இருந்து வரக்கூடிய புகார்களுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில இடங்களில் எம்.எல்.ஏ.,க்களிடம் புகார் அளிக்கின்றனர். அவர்கள், டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.சமூக அமைப்புகள், குடியிருப்பு சங்கங்கள் அளிக்கும் புகார்களில், கடைகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுகின்றன. இனி வரக்கூடிய காலங்களில், புகார்கள் வந்தால் உடனுக்குடன் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், ஒரு கடைக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக, உதயநிதி எம்.எல்.ஏ., ஒரு பதிவு போட்டிருந்தார். உடனடியாக, அந்த கடை மாற்றம் செய்யப்பட்டது.


வழக்கு பதிவு

சாமானியர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. டாஸ்மாக் கடைக்கு, ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பார்களுக்கு, கடையுடன் மற்றொரு நுழைவு வாயில் இருந்தால், அதை மூடுமாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.வெளிமாநில மது வகைகள் விற்கப்பட்டால் போலீசில் புகார் செய்து, உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.


மக்கள் எதிர்ப்பால்மாறிய கடைகள்!

தமிழக மதுபான சில்லரை விற்பனை விதிகளில் உள்ள வரையறைகளின்படி, மதுக் கடைகள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வழிபாட்டு தலம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து, 50 மீட்டர் துாரத்திற்குள்ளும்; பிற பகுதிகளில், 100 மீட்டர் துாரத்திற்குள்ளும் மது கடைகள் அமைக்கப்பட கூடாது.

மேலும், மது கடைகளை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக, உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படுகிறது. சில இடங்களில் விதிகளுக்கு மாறாக, டாஸ்மாக் மேலாளர்கள், 'பார்' உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, அவர்கள் தெரிவிக்கும் இடங்களில், கடைகளை துவக்குகின்றனர். இதனால், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள, 10 கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202123:00:31 IST Report Abuse
Pugazh V @Anand - chennai::: அதான் சாராயக் கடைகளை டாக்டர் கலைஞர் மூடிவிட்டாரே? இன்னுமா தெரியாது ? டாக்டர் கலைஞர் 2974 ல் நீங்கள் சொல்லும் சாராயக்கடைகள் உட்பட எல்லா மதுக்கடைகளையும் இழுத்து மூடினார். அடுத்து ஆட்சி க்கு வந்த எம்ஜிஆர் தான் மீண்டும் திறந்தார். டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கி அரசே மது விற்கலாம் என்று ஆரம்பித்ததும் எம்ஜிஆர் தான் தெரியுமா இல்லை இதுவும் தெரியாதா??
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-செப்-202122:21:02 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அரசுக்கு வருமானம் வர டாஸ்மார்க் அருகில் உள்ள பள்ளி, கோவில்களை முடலாமா
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202120:38:44 IST Report Abuse
Pugazh V கோவில்களின் அருகில் கடை திறந்தபொழுது இந்துக்கள் ஜடம் போல அமைதி காத்ததால் பல ஆண்டாக அனுபவித்தார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் இந்த கஷ்டத்தில் இருந்து ஜடமான இந்துக்களைக் காப்பாற்றுகிறார். வாழ்த்துக்கள். நன்றி சொல்லுங்கள் கா.ம. பாஸ்கரன் அவர்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X